பட்டாசு வெடிக்கும் பேச்சு! பட படக்கும் கண்ணழகி! எதிர்நீச்சல் நந்தினி! இசை ஹரிப்பிரியா போட்டோ கலெக்சன்!
- எதிர்நீச்சல் நந்தினி என்றாலே சட்டென நம் நினைவுக்கு வருவது அவரின் பட படப்பான பேச்சும், கொஞ்சல் சிரிப்பும் தான். இவரின் தனித்துவமான நடிப்பால் ஒரு ரசிகர் பட்டாளத்தையே தனக்கென வைத்துள்ளார்.
- எதிர்நீச்சல் நந்தினி என்றாலே சட்டென நம் நினைவுக்கு வருவது அவரின் பட படப்பான பேச்சும், கொஞ்சல் சிரிப்பும் தான். இவரின் தனித்துவமான நடிப்பால் ஒரு ரசிகர் பட்டாளத்தையே தனக்கென வைத்துள்ளார்.
(1 / 6)
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு தடத்தை பதித்துள்ளார் ஹரிப்பிரியா. விஜய் டிவியின் கனா கானும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக சன் டிவியின் பிரியாமானவள் சீரியல் மூலம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இவருக்கு. அதனை அடுத்து ஹரிப்பிரியா அனைவராலும் பேசப்பட்டு வந்தார்.
(Instagram )(2 / 6)
பிரியாமானவள் சீரியல் மூலம் எல்லாருக்கும் தெரிந்தவர் ஆனாலும். தமிழ் ரசிகர்களின் குடும்பத்தில் ஒரு ஆளாக மாற இவருக்கு எதிர்நீச்சல் சீரியல் தான் உதவியது. கோலங்கள் மூலம் 90 ஸ் கிட்ஸ்களின் மனதை வென்ற திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் சீரியல் பட்டித் தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இந்த சீரியலின் இரண்டாம் பாகம் கடந்த சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பாக தொடங்கியது.
(3 / 6)
எதிர்நீச்சலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு சரி சமமாக பதிலுக்குப் பதில் பேசக்கூடியது நந்தினி கதாபாத்திரம் தான். நந்தினி vs ஆதி குணசேகரன் என்ற காட்சிகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
(4 / 6)
பரத நாட்டியத்தில் சிறப்பான திறமை கொண்ட ஹரிப்பிரியா சமீபத்தில் ஒரு நடனப் பள்ளியையும் தொடங்கி இருக்கிறார். ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் கற்றுக் கொடுத்து வருகிறார். பரதநாட்டியத்தில் சிறந்து விளங்கிய காரணத்தால் இவருக்கு இயல்பாகவே முக பாவனைகள் வருகிறது.
(Instagram )(5 / 6)
சீரியல் நடிகர் விக்கியை இவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமணம் விவகாரத்தில் முடிந்தது. இதன் பின்னர் ஹரிப்பிரியா தனியாக வாழ்ந்து வருகிறார். நடுவே இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதனை கோபமாக மறுத்து இருந்தார். மேலும் எதிர்நீச்சல் சீரியலின் தொடக்கத்தில் இவர் மீது சமூக வலைத்தளங்களில் உருவகேலிக்கு உள்ளானார். இதனை மிகவும் துணிச்சலாக கையாண்டார்.
(6 / 6)
கடந்த சில நாட்களுக்கு முன் ஹரிப்பிரியா மற்றும் பிரியதர்ஷினி இருவரும் கலந்து கொண்ட விழா ஒன்றில் இவர்கள் இருவரும் இளையராஜா பாடல் ஒன்றை முகபாவனை செய்தனர். தளபதி படத்தின் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலுக்கு இருவரின் பரதநாட்டிய பாவனை செய்யும் வீடியோ வைரல் ஆனது. ஹரிப்பிரியாவின் முகபாவனைக்கு என தனி ரசிகர்கள் இருப்பது இந்த வீடியோவால் உறுதியானது.
மற்ற கேலரிக்கள்