Erode East By-Election: ஸ்டாலின் VS சீமான் என்று மாறுகிறதா ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம்!
- ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது
- ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது
(1 / 8)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்து உள்ள நிலையில், திமுக - நாம் தமிழர் கட்சி இடையே போட்டி உண்டாகும் சூழல் உண்டாகி உள்ளது.
(2 / 8)
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது
(3 / 8)
பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்
என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ள நிலையில் வேட்பு
மனுத்தாக்கல் தொடங்கி உள்ளது.
(4 / 8)
இந்தியா கூட்டணி சார்பில் திமுகவே நேரடியாக போட்டியிடும் என காங்கிரஸ் கட்சி அறிவித்த நிலையில், திமுகவின் வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
(5 / 8)
மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளார்.
(6 / 8)
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் ஈரோடு இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து உள்ளர்!
(7 / 8)
நட்சத்திர விடுதியில் நடந்த ஆலோசனைக்கு பிறகு பாஜக கூட்டணியும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்!
மற்ற கேலரிக்கள்