Irregular Periods: ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை ஏற்பட காரணங்கள் என்ன? தவிர்க்க சாப்பிட வேண்டிய உணவுகள்
Food For Irregular Periods: ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது பெண்களை பாதிக்கும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. வழக்கமான மாதவிடாய் சுழற்சி பெண் உடல் ஆரோக்கியமாக இருப்பதன் அறிகுறியாகும். மாதவிடாய் சுழற்சிய சரியான இருக்க சில உணவுகளை உட்கொள்ளாமல் இருக்க வேண்டும்
(1 / 7)
மன அழுத்தம், ஹார்மோன் சமநிலையின்மை, மோசமான உணவு பழக்கம் மற்றும் உடல்நல பிரச்னைகள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கின்றன. நல்ல உணவு பல நோய்களுக்கு மருந்தாகும். சில ஊட்டச்சத்துக்கள் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்ததக்கும் நன்மை தருகிறது
(2 / 7)
ஒழுங்கற்ற மாதவிடாய் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படலாம். இது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் உடலில் உள்ள இரத்த நாளங்களை நிரப்பவும் ஆரோக்கியமான இரத்த உற்பத்திக்கும் உதவுகின்றன. இதற்கு பச்சை காய்கறிகள் (கீரை, முட்டைக்கோஸ்), பூசணி விதைகள், முழு தானியங்கள், சிவப்பு இறைச்சி மற்றும் பருப்பு வகைகள் சாப்பிட வேண்டும்
(3 / 7)
ஆரோக்கியமான கொழுப்புகள் ஹார்மோன் சமநிலை மற்றும் வழக்கமான மாதவிடாய் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தை குறைத்து மாதவிடாய் பிடிப்பை கட்டுப்படுத்துகின்றன. அவகேடோ, சால்மன், மத்தி மீன்கள் மற்றும் ஆளி விதைகள், சியா விதைகள், வால்நட்ஸ், ஆலிவ் எண்ணெய் போன்ற உணவுகளை சாப்பிடலாம்
(4 / 7)
கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதன் மூலம் மாதவிடாய் பிரச்னைகளைச் சமாளிக்க உதவுகின்றன. ஓட்ஸ், பிரவுன் ரைஸ் மற்றும் குயினோவா போன்ற முழு தானியங்கள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பட்டாணி போன்ற பருப்பு வகைகள், ப்ரோக்கோலி மற்றும் கேரட் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம்
(5 / 7)
வைட்டமின் சி நிறைந்த உணவுகள் ஹார்மோன் உற்பத்தி மற்றும் இரும்புச்சத்து உறிஞ்சுதலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி மற்றும் கிவி போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி உள்ளது
(6 / 7)
மெக்னீசியம் நிறைந்த உணவுகள் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கான காரணங்களில் ஒன்றாகும். அதை குறைப்பதன் மூலம், தசை தளர்வு ஏற்பட்டு மாதவிடாய் வலியைக் குறைக்கலாம். டார்க் சாக்லேட், பாதாம், வால்நட்ஸ், முந்திரி, பச்சை காய்கறிகள் மற்றும் பூசணி விதைகள் இதற்கு நல்ல உணவுகள்
(7 / 7)
குறிப்பு: இங்கு பகிரப்படும் அனைத்து தகவல்களும் முற்றிலும் உண்மை என்றும், இது நிச்சயமாக ஒரு தீர்வை வழங்கும் என்றும் நாங்கள் கூற முடியாது. இருப்பினும், பல நிபுணர்களின் அனுபவங்களின் அடிப்படையில் அதைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்த பிறகு இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இது எப்போதும் முழுமையான தீர்வை வழங்கும் என்று நாம் கூற முடியாது. எனவே, நீண்ட கால அல்லது கடுமையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்த வழி. அவசர பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன் பெறுவது நல்லது. இவை அனைத்தையும் முதலுதவியாகப் பயன்படுத்தலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி பலன் பெறுங்கள்
மற்ற கேலரிக்கள்