வீட்டில் புகுந்து தொல்லை தரும் கொசுக்கள், ஈக்கள், கரப்பான், எலிகள்.. விரட்ட எளிய டிப்ஸ் இதோ
எவ்வளவுதான் தூய்மையை கடைப்பிடித்தாலும், மழை நேரத்தில் கொசுக்கள், ஈக்கள், பல்லிகள், கரப்பான் பூச்சிகள், எலிகள் மற்றும் பூச்சிகள் வீட்டுக்குள் நுழைவது பெரும் தொல்லை தரும் விஷயமாகவே உள்ளது. இதிலிருந்து விடுபட உதவும் சில எளிய டிப்ஸ்கள் பற்றி பார்க்கலாம்
(1 / 11)
வீட்டில் நுழைந்து அச்சுறுத்தல் தரும் உயிரினங்களை விரட்டும் வழிகள்: மழைக்காலம் வந்தவுடன், வீட்டில் கொசுக்கள் அதிகரிக்கும். இதனுடன் ஈக்கள், எலிகள், பல்லிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் மழைக்கால பூச்சிகளும் வீட்டினுள் புகுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும். வீட்டில் இங்கும் அங்குமாக இவை காணப்படுகின்றன. இவற்றை விரட்டாவிட்டால், நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும். கொசுக்கள், ஈக்கள், எலிகள், பல்லிகள், கரப்பான் பூச்சிகள் போன்ற பூச்சிகள் மற்றும் உயிரினங்களை அகற்ற, சில டிப்ஸ்களை முறையாக பின்பற்றினால் பலன் பெறலாம்
(2 / 11)
கிராம்புகளை வைத்தல்: சமையலறை அடுக்கின் விளிம்புகளில் கிராம்புகளை வைக்கவும். கிராம்புகளின் வாசனை பூச்சிகள் ஒளிந்து கொள்வதைத் தடுக்கிறது. இந்த வாசனை பொறுக்கமுடியால் அவை தானாகவே இருப்பிடத்தை விட்டு ஓடிவிடும்
(shutterstock)(3 / 11)
குளிர்சாதன பெட்டியில் பேக்கிங் சோடா: வீட்டில் இருக்கும் பிரிட்ஜில் பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தைப் போக்க, ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடாவை வைக்கவும். இது துர்நாற்றத்தை நீக்கும். குளிர்சாதன பெட்டியில் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கும்
(shutterstock)(4 / 11)
எலிகளை விரட்ட உதவும் வெங்காயம்: எலிகள் வீட்டுக்குள் நுழைந்து இங்கும் அங்குமாக ஒளிந்து கொண்டால், அவை மறைந்திருக்கும் மூலைகளில் நறுக்கிய வெங்காயத்தை வைக்கவும். எலிகளுக்கு வெங்காயத்தின் வாசனை பிடிக்காது. எனவே வீட்டில் ஒளிந்து கொள்ள இடம் கிடைக்காமல் அவை அங்கிருந்து வெளியேறிவிடும்
(shutterstock)(5 / 11)
பழங்களில் ஈக்களை அகற்றும் வழிகள்: வீட்டில் வைத்திருக்கும் பழக் கூடையில் ஈக்கள் சூழ்ந்து கொள்வதை தடுக்க, ஒரு துணியில் வினிகரை தடவி கூடையைச் சுற்றியும் ஓரங்களிலும் வைக்கவும். இது பழங்களில் ஈக்களை சூழ்ந்து கொள்ள விடாமல் விரட்டும்
(shutterstock)(6 / 11)
உப்பு நீர் தெளிப்பு: சிலந்திகள் வீட்டில் மிக விரைவாக வலைகளை உருவாக்கினால், தண்ணீரில் கலந்த உப்பை சுவர்களிலும் திரைச்சீலைகளிலும் தெளிக்கவும். இது வலைகள் விரைவாக உருவாவதை தடுக்கும்
(shutterstock)(7 / 11)
சிவப்பு எறும்புகளை விரட்டும் வழிகள்: வீட்டில் அங்கும் இங்கும் சிவப்பு எறும்புகள் வெளியே வந்தால், அந்த இடத்தில் மஞ்சள் பொடியைத் தூவவும். இது எறும்புகளை சிறிது நேரத்தில் ஓடவிடும்
(shutterstock)(8 / 11)
கரப்பான் பூச்சிகளை விரட்டும் வழிகள்: சமையலறையில் கரப்பான் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தால், பிரிஞ்சி இலைகள், இலவங்கப்பட்டை மற்றும் போரிக் அமிலத்தை தண்ணீரில் கலந்து தெளிக்கவும். இது கரப்பான் பூச்சிகளை விரட்டும்
(shutterstock)(9 / 11)
பல்லிகளை எப்படி விரட்டுவது: வீட்டில் அதிக பல்லிகள் தொல்லை இருந்தால், கருப்பு மிளகு பொடியை தண்ணீரில் கலந்து சுவர்கள் மற்றும் திரைச்சீலைகளில் தெளிக்கவும். இது பல்லிகளை விரட்டும்
(shutterstock)(10 / 11)
கொசு விரட்டி: கொசு தொல்லையில் இருந்து தப்பிக்க, வீட்டிலிருந்து கொசுக்களை விரட்ட, உலர்ந்த வேப்ப இலைகளை எரிக்கவும். வேம்பின் வாசனையால் கொசுக்கள் ஓடிவிடும்
(shutterstock)மற்ற கேலரிக்கள்














