தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Breakfast Foods Mistakes: காலை உணவு சாப்பிடுவதில் இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்! ஊட்டச்சத்து நிபுணர்களின் டிப்ஸ்

Breakfast Foods Mistakes: காலை உணவு சாப்பிடுவதில் இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்! ஊட்டச்சத்து நிபுணர்களின் டிப்ஸ்

Jun 07, 2024 09:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 07, 2024 09:00 PM , IST

  • சமநிலையான காலை உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கலாம். காலை உணவானது அன்றைய நாளில் நாம் சாப்பிடும் முதல் உணவாக இருந்து வருகிறது. அந்த வகையில் காலை நேரத்தில் எடுத்துக்கொள்ள கூட உணவுகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவதை பார்க்கலாம்

ஸ்டார்ச் உணவுகளான பிரட் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்ககூடும். அதேபோல் வெறும் வயிற்றில் தேநீர், காபி பருகுவது வயிறு உப்புசம், அஜீரண கோளாறை ஏற்படுத்தும். அந்த வகையில் காலை உணவு எடுத்துக்கொள்வதில் செய்யக்கூடாத விஷயங்களை பார்க்கலாம்

(1 / 6)

ஸ்டார்ச் உணவுகளான பிரட் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்ககூடும். அதேபோல் வெறும் வயிற்றில் தேநீர், காபி பருகுவது வயிறு உப்புசம், அஜீரண கோளாறை ஏற்படுத்தும். அந்த வகையில் காலை உணவு எடுத்துக்கொள்வதில் செய்யக்கூடாத விஷயங்களை பார்க்கலாம்(Freepik)

தேநீர்: காலை எழுந்தவுடன் சூடாக தேநீர் அல்லது காபி குடிக்கும் பழக்கம் பெரும்பாலோனருக்கு இருக்கிறது. இவற்றை பாலில் தயார் செய்தே பருகுகிறோம். பாலில் இருக்கும் லேக்டோஸ் மற்றும் கேசின் பிரச்னையை ஏற்படுத்தலாம். பலருக்கு லாக்டோஸ் சரியாக செரிமானம் அடைவதில்லை. அவ்வாற செரிமானம் ஆகாத லாக்டோஸ்கள் குடலில் சென்று பாக்டீரியாவாக உருமாறுகிறது. இதனால் வாயு, வயிறு உப்புசம், வயிற்று போக்கு போன்றவை ஏற்படுகிறது. பாலில் இருக்கும் கேசின் காரணமாக குடல் அழற்சி ஏற்படுவதுடன், குடல் புறணியை சேதப்படுத்தலாம். இதன் காரணமாக தீங்கு விளைவிக்கும் பொருள்கள் ரத்த ஓட்டத்தில் நுழைவதை எளிதாக்கிறது, குடல் ஆரோக்கியத்தை மோசமாக்குகிறது

(2 / 6)

தேநீர்: காலை எழுந்தவுடன் சூடாக தேநீர் அல்லது காபி குடிக்கும் பழக்கம் பெரும்பாலோனருக்கு இருக்கிறது. இவற்றை பாலில் தயார் செய்தே பருகுகிறோம். பாலில் இருக்கும் லேக்டோஸ் மற்றும் கேசின் பிரச்னையை ஏற்படுத்தலாம். பலருக்கு லாக்டோஸ் சரியாக செரிமானம் அடைவதில்லை. அவ்வாற செரிமானம் ஆகாத லாக்டோஸ்கள் குடலில் சென்று பாக்டீரியாவாக உருமாறுகிறது. இதனால் வாயு, வயிறு உப்புசம், வயிற்று போக்கு போன்றவை ஏற்படுகிறது. பாலில் இருக்கும் கேசின் காரணமாக குடல் அழற்சி ஏற்படுவதுடன், குடல் புறணியை சேதப்படுத்தலாம். இதன் காரணமாக தீங்கு விளைவிக்கும் பொருள்கள் ரத்த ஓட்டத்தில் நுழைவதை எளிதாக்கிறது, குடல் ஆரோக்கியத்தை மோசமாக்குகிறது(Instagram/@kirti7s)

பழ ஜூஸ்கள்: காலை உணவில் ஒரு போதும் பழ ஜூஸ்கள் இருக்க கூடாது. குறிப்பாக வெறும் வயிற்றில் அவற்றை பருக கூடாது. இந்த ஜூஸ்களில் இருக்கும் செரிவூட்டப்பட்ட சர்க்கரை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதனால் விரைவாக சோர்வு உணர்வை ஏற்படுவதுடன், பசியும் உண்டாகும்

(3 / 6)

பழ ஜூஸ்கள்: காலை உணவில் ஒரு போதும் பழ ஜூஸ்கள் இருக்க கூடாது. குறிப்பாக வெறும் வயிற்றில் அவற்றை பருக கூடாது. இந்த ஜூஸ்களில் இருக்கும் செரிவூட்டப்பட்ட சர்க்கரை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதனால் விரைவாக சோர்வு உணர்வை ஏற்படுவதுடன், பசியும் உண்டாகும்(Pixabay)

பிரட்: ஸ்டார்ட்ச் இயல்பு காரணமாக காலை நேரத்தில் பிரட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காலையில் வெறும் வயிறாக இருக்கும்போது பிரட் சாப்பிடுவதால் குளுகோஸ் அளவு அதிகரித்து செரிமான பிரச்னையை ஏற்படுத்தும். அடுத்த வேலை உணவு சாப்பிட்ட பிறகும் இந்த பிரச்னை நீடிக்கும் 

(4 / 6)

பிரட்: ஸ்டார்ட்ச் இயல்பு காரணமாக காலை நேரத்தில் பிரட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காலையில் வெறும் வயிறாக இருக்கும்போது பிரட் சாப்பிடுவதால் குளுகோஸ் அளவு அதிகரித்து செரிமான பிரச்னையை ஏற்படுத்தும். அடுத்த வேலை உணவு சாப்பிட்ட பிறகும் இந்த பிரச்னை நீடிக்கும் (Unsplash/@Pixzolo)

எலெக்ட்ரோலைட்கள்: கடைகளில் வாங்கும் எலெக்ட்ரோலைட்களில் செயற்கை நிறத்தை கொண்டதாக இருக்கும். எனவே அதை தவரிப்பது நல்லது. இதில் இருக்கும் சுக்ரோஸ், அசெசல்பேம் பொட்டாசியம் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் செயல்பாட்டில் நுழைந்து சமநிலையின்மையை உருவாக்கும். இதனால் செரிமான கோளாறுகள் ஏற்படலாம்

(5 / 6)

எலெக்ட்ரோலைட்கள்: கடைகளில் வாங்கும் எலெக்ட்ரோலைட்களில் செயற்கை நிறத்தை கொண்டதாக இருக்கும். எனவே அதை தவரிப்பது நல்லது. இதில் இருக்கும் சுக்ரோஸ், அசெசல்பேம் பொட்டாசியம் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் செயல்பாட்டில் நுழைந்து சமநிலையின்மையை உருவாக்கும். இதனால் செரிமான கோளாறுகள் ஏற்படலாம்

காலை உணவு ரத்த சர்க்கரை அளவில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். அத்துடன் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தந்து, எடை அதிகரிப்பையும் தடுக்க வேண்டும். எனவே புரதம், காம்பிளஸ் கார்ப்போஹைட்ரேட், நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள், முக்கிய வைட்டமின்கள், தாதுக்கள் இருக்கும் உணவுகளை காலை உணவாக தேர்வு செய்யலாம்

(6 / 6)

காலை உணவு ரத்த சர்க்கரை அளவில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். அத்துடன் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தந்து, எடை அதிகரிப்பையும் தடுக்க வேண்டும். எனவே புரதம், காம்பிளஸ் கார்ப்போஹைட்ரேட், நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள், முக்கிய வைட்டமின்கள், தாதுக்கள் இருக்கும் உணவுகளை காலை உணவாக தேர்வு செய்யலாம்(Unsplash)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்