பள்ளிப் பாடங்களைப் படிக்கப் பிடிக்கவில்லையா? கவலைவேண்டாம்! இதைச்செய்தாலே போதும் மார்க் வாங்கலாம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பள்ளிப் பாடங்களைப் படிக்கப் பிடிக்கவில்லையா? கவலைவேண்டாம்! இதைச்செய்தாலே போதும் மார்க் வாங்கலாம்!

பள்ளிப் பாடங்களைப் படிக்கப் பிடிக்கவில்லையா? கவலைவேண்டாம்! இதைச்செய்தாலே போதும் மார்க் வாங்கலாம்!

Dec 10, 2024 03:52 PM IST Priyadarshini R
Dec 10, 2024 03:52 PM , IST

  • பள்ளிப் பாடங்களைப் படிக்கப் பிடிக்கவில்லையா? கவலைவேண்டாம்! இதைச்செய்தாலே போதும் மார்க் வாங்கலாம்!

உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி, படிக்கத்தூண்டும் வழிகள் என்ன?படிக்க புத்தகத்துடன் அமர்ந்துகொண்டு, படிக்காமல் ஏதோ கற்பனை உலகத்தில் எங்கோ பயணித்துக்கொண்டு இருக்கிறீர்களா? எனில் உங்களை பிடித்து இழுத்து வந்து படிக்கவைக்க என்னசெய்வது என்று பாருங்கள்.

(1 / 8)

படிக்கும் வழக்கத்தை மாற்றுங்கள் - சிறிய மாற்றம் கூட பெரிய வித்யாசத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு ஒரே வழக்கம் இருந்தால் அது கட்டாயம் போர் அடிக்கும். உங்கள் படிப்புக்கும் அது விதிவிலக்கல்ல. நீங்கள் ஒரே மாதிரி படிக்காமல் நீங்கள் ஒரு கருப்பொருளை வைத்துக்கொண்டு, அந்த நாட்களில் அதை மட்டும் படிக்கலாம். ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் என எடுத்துக்கொண்டு படிக்கலாம் அல்லது ஒவ்வொரு பாடத்திலும் அன்றைக்கு தேவையானது என தேர்ந்தெடுத்து படிக்கலாம் அல்லது வீட்டுப்பாடத்துடன் தொடர்புடையதைப் படிக்கலாம்.

(2 / 8)

விளையாட்டு வழிகளில் உங்களுக்கு பரிசு கொடுங்கள் - நீங்கள் உங்களுக்கு பரிசு கொடுத்துக்கொள்ளுங்கள். சிறிய இலக்குகளை நிர்ணயித்துவிட்டால், அதை அடைந்துவிட்டால் உங்களிடம் இருந்து நீங்களே பரிசு பெற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுவது ஆகட்டும் அல்லது உங்களுக்கு பிடித்த ஸ்னாக்ஸ் சாப்பிடுவது ஆகட்டும் என எதுவாக இருந்தாலும், அதை செய்ய முயலுங்கள். இதனால் உங்களுக்கு பரிசு கிடைக்கும் என்ற ஆர்வத்தில் நீங்கள் படிப்பீர்கள். இது உங்களுக்கு உற்சாகத்தையும் தரும். படிப்பையும் முடித்துவிடும்.

(3 / 8)

படிக்கும் இடம் - நீங்கள் அமர்ந்து படிக்கும் இடம் மிகவும் முக்கியமானது. நீங்கம் படிக்கும் இடத்தில் நல்ல ஆற்றல் இருக்கவேண்டும். அங்கு செடிகள் வையுங்கள் அல்லது புதிய அலங்காரப்பொருளை வாங்கி வையுங்கள். வித்யாசமான சூழலில் நீங்கள் படிக்கும்போது, அது உங்களின் மனநிலை மற்றும் கவனத்தையே மாற்றும். இந்த இடமாற்றம் உங்களின் கிரியேட்டிவிட்டியை மாற்றும். இது உங்களின் படிப்பை நீங்கள் மகிழ்ந்திருக்கும் வேலையைச் செய்வதுபோல் உணரவைக்கும்.

(4 / 8)

மதிப்பெண்களுக்காக படிக்காதீர்கள் - நீங்கள் கல்வி கற்கிறீர்கள் என்பதை மனதில்கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதாக இருக்கட்டும் அல்லது உங்களின் அறிவை வளர்ப்பதாக இருக்கட்டும். உங்களுக்கு எதற்கு கல்வி என்பதில் கவனம் செலுத்துங்கள். இது உங்களை மதிப்பெண்களைக் கடந்தும் கற்கத்தூண்டும். உங்கள் கல்வியில் மதிப்பு உள்ளது என்று உணர்ந்தால், இது கல்வி மீதான உங்களின் நிலைப்பாட்டை மாற்றும்.

(5 / 8)

கல்வியில் விளையாட்டு - உங்கள் கல்வியை ஒரு விளையாட்டைப்போல் கற்றுக்கொள்ளுங்கள். அதில் சவால்கள், கால அளவு என நிர்ணயித்துக்கொள்ளுங்கள் அல்லது நீங்கள் சில ஆப்களை வைத்துக்கொண்டு உங்களின் முன்னேற்றம் மற்றும் பரிசு என உங்களின் வெற்றியை அளவிடுங்கள். இது உங்களுக்கு உற்சாகத்தரும். இதனால் உங்களுக்கு படிக்கும் நேரம் என்பது ஒரு பணியைப் போலன்றி, ஒரு சவாலாக உற்சாகமளிக்கும்.

(6 / 8)

நண்பர்களுடன், குழுவாகப் படியுங்கள் - நீங்கள் மட்டும் படிக்கும்போது அது உங்களுக்கு தனிமை உணர்வை ஏற்படுத்தும். எனவே நண்பர்களுடன் சேர்ந்து படியுங்கள். ஒருவருக்கொருவர் குழுவாக அமர்ந்து, உங்களின் ஐடியாக்களை பகிர்ந்து படியுங்கள். இதனால் ஒருவருக்கு தெரியாத விஷயத்தை மற்றவரிடம் இருந்து கற்க முடியும். இது உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். எனவே புதிய கோணங்கள் மற்றும் புரிதலை உருவாக்க மற்றவர்களுடன் நீங்கள் சேர்ந்து படிப்பது உதவும்.

(7 / 8)

சிறிய இலக்குகளை நிர்ணயுங்கள் மற்றும் கொண்டாடுங்கள் - உங்களின் பணிகளை சிறியதாக்கிக்கொள்ளுங்கள். முடிக்க முடிந்ததாக மாற்றுங்கள். உங்களின் ஒவ்வொரு சாதனையையும் கொண்டாடுங்கள். அதற்கு பரிசாக கொஞ்சம் இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் சிறிய வெற்றிகள், உங்களுக்கு எதையோ சாதித்து முடித்து விட்ட உற்சாகத்தைத் தரும். இது உங்களை தொடர்ந்து செல்ல உற்சாகப்படுத்தும்.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்