குளிர் காலத்தில் இந்த உணவுகளுடன் பழங்களை மட்டும் சாப்பிடாதீர்கள்!
- குளிர் காலத்தில் இந்த உணவுகளுடன் பழங்களை மட்டும் சாப்பிடாதீர்கள்!
- குளிர் காலத்தில் இந்த உணவுகளுடன் பழங்களை மட்டும் சாப்பிடாதீர்கள்!
(1 / 11)
நீங்கள் இந்த உணவுகளை மட்டும் பழங்களுடன் குளிர் காலத்தில் சேர்த்து சாப்பிடக்கூடாது. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
(2 / 11)
உப்பு நிறைந்த உணவுகள் - சிப்ஸ் மற்றும் வறுவல்கள் போன்ற உப்பு நிறைந்த உணவுகளை நீங்கள் பழங்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் உங்கள் செரிமானத்தில் இடையூறு ஏற்படும். இது உங்களின் வயிறு உப்புசத்துக்கு வழிவகுக்கும்.
(3 / 11)
ஊறவைத்த உணவுகள் - ஊறவைத்த உணவுகளான ஊறுகாய்கள் போன்றவற்றை நீங்கள் பழங்களுடன் சாப்பிடக்கூடாது. அசிட் நிறைந்த பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஊறுகாய் நொதிக்க வைக்கப்படுகிறது. இதை நீங்கள் பழங்களுடன் சேர்த்து சாப்பிடும்போது அது உங்கள் செரிமானத்தில் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இந்த உணவுகளை சுவையாக இருக்கும். ஆனால் உங்கள் உடலில் உபாதைகளை ஏற்படுத்தும்.
(4 / 11)
ஸ்டார்ச் உணவுகள் - ஸ்டார்ச் உணவுகளை பழங்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் உங்கள் வயிற்றில் நொதித்தல் நடைபெறும். இது உங்கள் வயிற்றில் வாயு மற்றும் உப்புசத்தை ஏற்படுத்தும்.
(5 / 11)
முட்டை - முட்டையை நீங்கள் பழங்களுடன் சாப்பிடும்போது, அது உங்கள் உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும். அதில் முக்கியமானது செரிமானத்தை மெதுவாக்குவது மற்றும் வயிறு முற்றிலும் நிறைந்த உணர்வைக் கொடுப்பது என இரண்டும் ஆகும். இந்த இரண்டும் வேறு முறைகளில் செரிப்பவை. இதனால் உங்கள் உடலுக்கு குழப்பம் ஏற்படும். எனவே இவையிரண்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது.
(6 / 11)
தேன் - பழங்களுடன் தேன் கலந்து சாப்பிடக்கூடாது என்று ஆயுர்வேத மருத்துவம் அறிவுறுத்துகிறது. குறிப்பாக அதிக தண்ணீர் சத்துக்கள் உள்ள பழங்களுடன் தேனை கலந்து சாப்பிடக்கூடாது. இது உங்கள் உடலில் நச்சுக்களை உருவாக்குகிறது. இதனால் உங்கள் வயிற்றில் உபாதைகள் ஏற்படும்.
(7 / 11)
பருப்பு வகைகளை - பருப்பு வகைகளை பழங்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் உங்களுக்கு செரிமானக் கோளாறுகள், வாயு மற்றும் உப்புசம் போன்றவை ஏற்படும்.
(8 / 11)
டீ அல்லது காபி - டீ அல்லது காபியில் உள்ள அசிடிட்டி உட்பொருட்கள் நீங்கள் சாப்பிடும் பழங்களின் செரிமானத்தில் இடையூறை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு அசிடிட்டி மற்றும் அசவுகர்யங்கள் ஏற்படுகிறது.
(9 / 11)
பால் பொருட்கள் - பால் பொருட்களை சிட்ரஸ் பழங்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. குறிப்பாக ஆரஞ்சுகள் மற்றும் அன்னாசிப்பழங்கள் போன்றவற்றை எடுத்துககொள்ளக்கூடாது. இதனால் அவை பாலை புளிக்கச் செய்ய முயற்சிக்கும். இதனால் உங்கள் வயிற்றில் உப்புசம் மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்படும். எனவே பாலையும், சிட்ரஸ் பழங்களையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.
(10 / 11)
வெள்ளரி - வெள்ளிரிக்காய்களை பழங்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. குறிப்பாக சிட்ரஸ் பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவதை தடுக்கவேண்டும். இது உங்களுக்கு செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். இவை செரிக்க மிகவும் சிரமப்படும் என்பதால் உங்களுக்கு வயிறு உபாதைகள் ஏற்படும்.
(11 / 11)
கார உணவுகள் - கார உணவுகளை நீங்கள் பழங்களுடன் சேர்த்து சாப்பிடும்போது, அது உங்கள் வயிறு மற்றும் செரிமான மண்டலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் அளவு குறையும் என்றும் கூறப்படுகிறது.
எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை பழங்களுடன் சாப்பிடுவதை தவிர்த்தல் நலம். பொதுவாகவே வேக வைத்த உணவுகளுடன் பழங்களை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே நீங்கள் பழங்கள் சாப்பிடும்போது கவனமாக இருக்கவேண்டும். இதை குளிர் காலத்தில் மட்டுமின்ற அனைத்து பருவத்திலும் பின்பற்றுவது நல்லது.
மற்ற கேலரிக்கள்