'ஊசி போடும் இரண்டு கண்களில் உயிரை தின்னும் நாயகிகள்’: டாக்டர் ஹீரோயின்ஸ் புகைப்படங்கள்!
- மருத்துவக் கல்வி பெற்ற இந்திய நடிகைகள் பற்றிய விவரம் குறித்து அறிந்துகொள்வோம்.
- மருத்துவக் கல்வி பெற்ற இந்திய நடிகைகள் பற்றிய விவரம் குறித்து அறிந்துகொள்வோம்.
(1 / 6)
இந்தியத் திரையுலகில், குறைந்த கல்வியறிவு மூலம் பெரும் வெற்றியைப் பெற்ற நடிகைகள் உள்ளனர். அது ஒருபக்கம் இருந்தாலும், சிறந்த கல்வியைப் பெற்று திரைப்படத் துறையில் பிரபலமடைந்த நடிகைகளும் உள்ளனர்.
பல நடிகைகள் உயர் கல்வி பெற்றுள்ளனர். சில நடிகைகள் மருத்துவக் கல்வி பெற்றுள்ளனர். வேறு சில நடிகைகளும் மருத்துவர்களாகப் பணியாற்றியுள்ளனர். சில நடிகைகள் மருத்துவக் கல்வியை முடித்த பிறகு திரைப்படத் துறையில் நுழைந்துள்ளனர்.
எதிர்காலத்தில் நடிப்புக்கு முழுக்குப்போட்டால், அத்தகைய நடிகைகள் மருத்துவர்களாகவும் பணியாற்றலாம். சாய் பல்லவி, ஸ்ரீலீலா உட்பட பல நடிகைகள் இப்படி மருத்துவக் கல்வியைப் பெற்றுள்ளனர்.
(2 / 6)
ஷிவானி ராஜசேகர்:
டாக்டர் ராஜசேகரின் மகள் நடிகை ஷிவானி ராஜசேகர். இவர் தனது மருத்துவக் கல்வியை ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவக் கல்லூரியில் முடித்தார். இதனுடன், அவர் மலர் மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை தொடர்பான கல்வியையும் பெற்றுள்ளார். அவர் பிப்ரவரி 2024-ல் தனது மருத்துவக் கல்வியை முடித்தார்.
(3 / 6)
ஸ்ரீலீலா:
பிரபல தென்னிந்திய நடிகை ஸ்ரீலீலா தனது எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவர் தனது மருத்துவக் கல்வியை 2021ஆம் ஆண்டில் முடித்தார். அவரது தாயார் ஒரு மகளிர் மருத்துவ நிபுணர் ஆவார். நடிகை ஸ்ரீலீலா தனது தாயைப் போலவே மருத்துவராக வேண்டும் என்ற ஆசையுடன் மருத்துவக் கல்வியைப் படித்திருந்தார். இருப்பினும், அவர் திரைப்படத் துறையில் நுழைந்து, தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
(4 / 6)
மனுஷி சில்லர்:
ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் அகில இந்திய மருத்துவ முன்தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளார். இது இப்போது நீட் தேர்வு என்று அழைக்கப்படுகிறது. அவர் சோனிபட்டில் உள்ள பகத் போல் சிங், மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் முடித்துள்ளார்.
(5 / 6)
அதிதி ஷங்கர்:
தமிழின் பிரமாண்ட திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சங்கரும் ஒரு மருத்துவர் ஆவார். அவர் சென்னை ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றுள்ளார். நடிகை அதிதி ஷங்கர், விருமன் மற்றும் மாவீரன் ஆகியப் படங்களில் நடித்துள்ளார்.
(6 / 6)
சாய் பல்லவி:
நடிகை சாய் பல்லவி மருத்துவக் கல்வியையும் பெற்றுள்ளார். நடிகை சாய் பல்லவி, ஜார்ஜியாவில் உள்ள திபிலிசி மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியைப் பயின்றார். 2020ஆம் ஆண்டில், சாய் பல்லவி திருச்சியில் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வை (FMGE) எழுதினார். மருத்துவக் கல்வி பெற்றிருந்தாலும், அவர் இந்தியாவில் மருத்துவராகப் பதிவு செய்யவில்லை.
மற்ற கேலரிக்கள்