இந்தியாவிலேயே முதல் கண்ணாடி பாலம்! நம்ம கன்னியாகுமரியில்தான்! கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்!
- இந்தியாவில் பல நகரங்களில் கடல் இணைப்பு இருந்தாலும், அதைப் பார்க்க கண்ணாடி பாலம் இல்லை. கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும், திருவள்ளவர் சிலைக்கும் இடையே இத்தகைய பாலம் கட்டப்பட்டுள்ளது. .
- இந்தியாவில் பல நகரங்களில் கடல் இணைப்பு இருந்தாலும், அதைப் பார்க்க கண்ணாடி பாலம் இல்லை. கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும், திருவள்ளவர் சிலைக்கும் இடையே இத்தகைய பாலம் கட்டப்பட்டுள்ளது. .
(1 / 6)
இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் அமைந்துள்ள இந்தியப் பெருங்கடலின் மீது வான்புகழ் கொண்ட திருக்குறள் கொடுத்த திருவள்ளவரின் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் இடையே வித்தியாசமான கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது.(Tamilnadu Tourism)
(2 / 6)
விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளவர் சிலைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கண்ணாடி பாலம் ஒரு புது வித அனுபவத்தை வழங்குகிறது. ரூ.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலமுள்ள இந்த பாலம் கன்னியாகுமரிக்கு சிறப்பு வாய்ந்த இடமாக மாறியுள்ளது.
(3 / 6)
முன்னதாக, சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இரண்டையும் பார்வையிட படகு சேவையை நம்பியிருக்க வேண்டியிருந்தது. இப்போது இந்த பாலம் இரண்டுக்கும் இடையேயான சிறந்த இணைப்பாக உள்ளது. இனி நடந்தே போகலாம்.
(4 / 6)
மேம்பட்ட கட்டுமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது, இது அதன் ஆயுளை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அதன் வழியாக செல்பவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது
(5 / 6)
அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த கண்ணாடி பாலம், அரிப்பு மற்றும் வலுவான கடல் காற்று உள்ளிட்ட கடுமையான கடல் நிலைமைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பகல் மற்றும் இரவு நேரங்களில் இயக்கலாம்.
மற்ற கேலரிக்கள்