Raksha bandhan: சகோதரனுக்கு தங்கை இதை தவறாமல் செய்ய வேண்டும்..! லட்சுமி தேவி அருளுடன் வாழ்வில் அதிர்ஷ்டமும் கிடைக்கும்
Raksha bandhan 2024: அண்ணன் - தங்கைக்கு இடையிலான பாச பிணப்பை வெளிப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்காக அர்பணிக்கப்பட்ட விழாவாகவும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.
(1 / 6)
இந்த நாளில் சகோதரிகள் தங்களது சகோதரன் கைகளில் ராக்கி கயிறு கட்டி அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துவார்கள். அண்ணன்களும் தங்கைகளை பாதுகாப்பதாக உறுதி ஏற்பார்கள்
(2 / 6)
குங்குமத் திலகம் தடவுங்கள்: ரக்ஷா பந்தன் நாளில் சகோதரர்கள் கைகளில் சகோதரிகள் ராக்கி கட்டும் முன் அவர்கள் நெற்றியில் திலகம் இடுவார்கள். இந்த திலகம் சந்தனத்தால் செய்யப்படுகிறது. ஆனால் அண்ணனின் திலகத்தில் குங்குமம் இட்டால் அவர் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் சேரும். குரு பகவானின் ஆசீர்வாதமும் அந்த நபருகர்கு கிடைக்கும் என கூறப்படுகிறது
(3 / 6)
இந்த ஆண்டுக்கான ரக்ஷா பந்தன் விழா ஆகஸ்ட் 19ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில், ராக்கி கட்டுவதற்கான உகந்த நேரம் பிற்பகல் 1:32 முதல் இரவு 9:08 வரை உள்ளது. இந்த நேரத்தில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டலாம். ராக்கி கட்டும் போது சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், அவர்கள் சகோதரர்களின் எதிர்காலம் மிகவும் நன்மையும், சுபமும் பெறுவதாக இருக்கும். அத்துடன் சில விஷயங்களை கொடுப்பது அல்லது செய்வதன் மூலம் சகோதரர் மகாலட்சுமியின் முழு ஆசிர்வாதத்தை பெறுவார்
(4 / 6)
சகோதரனுக்கு தேங்காய் கொடுக்கலாம்: ராக்கி கட்டிய பின் சகோதரிகள் அண்ணனுக்கு தேங்காய் கொடுக்க வேண்டும். இதன் மூலம் சகோதரனின் வாழ்வில் வளம் சேர்க்கும் என்பது நம்பிக்கை. அத்துடன் மகாலட்சுமி தேவியிடமிருந்து ஆசீர்வாதமும் பெறுவார்
(5 / 6)
சகோதரனுக்கு கைக்குட்டை கொடுக்கலாம்: ரக்ஷா பந்தன் நாளில் நாளில் தங்கைகள் இளைய சகோதரர்களுக்கு ராக்கி கட்டினால், அவர்களுக்கு ஆடை கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் துணி கொடுக்க முடியாவிட்டால் கைக்குட்டையை கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அண்ணன் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் நிலைத்திருக்கும். கைக்குட்டை சுக்கிரன் கிரகத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது
மற்ற கேலரிக்கள்