தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Avoid These Vegetables: உடல் ஆரோக்கியத்தை பேனி காக்க..! கோடையில் அதிகமாக சாப்பிடக்கூடாத காய்கறிகள் இதுதான்

Avoid These Vegetables: உடல் ஆரோக்கியத்தை பேனி காக்க..! கோடையில் அதிகமாக சாப்பிடக்கூடாத காய்கறிகள் இதுதான்

Jun 16, 2024 08:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 16, 2024 08:00 AM , IST

  • ஆரோக்கியமாக நல்வாழ்வை பெற பருவத்துக்கு ஏற்ப உணவுகளை சாப்பிடுவது குறித்து ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதை பின்பற்றி தவறும்பட்சத்தில் கடுமையான உடல்நலக் கேடுகளை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது. கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய காய்கறிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும் என பொதுவான கருத்துகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த பருவத்தில், சில காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்தால் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். அந்த வகையில் கோடை காலத்தில் எந்தெந்த காய்கறிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்

(1 / 8)

உணவின் சுவையை அதிகரிக்கவும், அனைத்து விதமான உணவுகளிலும் அடிப்படை காய்கறியாக பயன்படும் வெங்காயம், கோடையில் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்,  வெங்காயத்தை எப்போதும் சமைத்த பிறகு சாப்பிட வேண்டும். பச்சையாக வெங்காயம் சாப்பிடுகிறீர்கள் என்றால், அதில் எலுமிச்சையை பிழிந்து சாப்பிடுவது நல்லது

(2 / 8)

பூண்டின் வெப்ப தன்மை காரணமாக, கோடைக் காலங்களிலும் இதை சாப்பிடுவதில் கவனம் கொள்ள வேண்டும். கோடையில் பூண்டை அதிகம் சாப்பிட்டால் உடலில் சொறி போன்ற பிரச்னை ஏற்படலாம்

(3 / 8)

சமையலுக்கு அடுத்தபடியாக இஞ்சி, தேநீர் தயாரிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கோடையில் குறைந்த அளவே இதை உட்கொள்ள வேண்டும். இஞ்சியின் சூடான தன்மை காரணமாக, அது உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரித்து பிரச்னைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது

(4 / 8)

காலிஃபிளவர் சூடான தன்மை கொண்டது. கோடையில் காலிஃபிளவரை அதிகமாக உட்கொள்வதால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதோடு, செரிமான பிரச்னையும் உண்டாகும்

(5 / 8)

உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொள்வது உடல் சூட்டை அதிகரிப்பதுடன், சருமம் மற்றும் செரிமான பிரச்னைகளையும் உண்டாக்கும்

(6 / 8)

பச்சை மிளகாயில் இருக்கும் நன்மை காரணமாக, உணவு சமைக்கும் போது சிவப்பு மிளகாக்கு பதிலாக பச்சை மிளகாய் பயன்படுத்த தொடங்குகிறார்கள். சிவப்பு மிளகாயைப் போலவே பச்சை மிளகாயும் இயற்கையில் உடல் சூட்டை ஏற்படுத்துவதாக உள்ளது. அதிகப்படியாக பச்சை மிளகாய் சாப்பிட்டால் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும்

(7 / 8)

காளானின் இருக்கும் வெப்ப தன்மை காரணமாக உடலில் உஷ்ணத்தை உண்டாக்கும். எனவே அவற்றை குறைந்த அளவில் உள்கொள்ள வேண்டும்

(8 / 8)

மற்ற கேலரிக்கள்