DMK MP's : ‘டீ-சர்ட்.. தீப்பறக்கும் வாசகம்..’ நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி எம்.பி.,களின் செய்கை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Dmk Mp's : ‘டீ-சர்ட்.. தீப்பறக்கும் வாசகம்..’ நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி எம்.பி.,களின் செய்கை!

DMK MP's : ‘டீ-சர்ட்.. தீப்பறக்கும் வாசகம்..’ நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி எம்.பி.,களின் செய்கை!

Published Mar 20, 2025 07:38 PM IST Stalin Navaneethakrishnan
Published Mar 20, 2025 07:38 PM IST

  • நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய டீசர்ட் அணிந்து வந்த திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.,கள், தொகுதி சீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று வேறு என்ன நடந்தது?

தி.மு.க., எம்.பி.,கள் கோஷங்கள் எழுதப்பட்ட டி-ஷர்ட் அணிந்ததால், ராஜ்யசபா வியாழக்கிழமை எந்த முக்கிய அலுவல்களையும் மேற்கொள்ளாமல், ஒத்திவைக்கப்பட்டது.

(1 / 10)

(PTI)

காலையில் சபை கூடியவுடன், தலைவர் ஜகதீப் தங்கர் ஆவணங்கள் மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் சில அறிக்கைகளை வைக்க அனுமதித்தார், அதன் பின்னர் அவர் சபையை சுமார் ஒரு மணி நேரம் ஒத்திவைத்தார்.

(2 / 10)

(Sansad TV)

நாடாளுமன்றத்தின் வெளியே, லோக்சபா மற்றும் ராஜ்யசபா திமுக கூட்டணி எம்.பி.,கள் டீசர்ட் அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன்

(3 / 10)

எதிர்ப்பு டீர்சர்ட் மற்றும் துண்டு அணிந்த படி திமுக எம்.பி.,கள் கதிர் ஆனந்த், தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் காங்கிரஸ் எம்.பி., ஜோதி மணி

(4 / 10)

கடும் வெயிலுக்கு மத்தியில் எதிர்ப்பு டீசர்ட் அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த திமுக எம்.பி., தயாநிதி மாறன்.

(5 / 10)

எதிர்ப்பு வாசகம் அடங்கிய டீசர்ட் அணிந்து நாடாளுமன்றம் முன்பு, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி.,கள்

(6 / 10)

நாடாளுமன்ற நுழைவுப் பகுதி அருகே எதிர்ப்பு வாசக டீசர்ட் அணிந்து, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.,கள்

(7 / 10)

மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பிய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.,கள்

(8 / 10)

நியாயமான தொகுதி பங்கீட்டை வழங்கக் கோரி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் ஆக்ரோஷமாக கோஷமிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

(9 / 10)

மத்திய அரசை கண்டித்து ஆக்ரோஷமாக கோஷமிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.,கள்

(10 / 10)

பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்