தீப்பிடிக்க தீப்பிடிக்க...காணாமல் போன நம்பிக்கை.. கை பிடித்து நின்ற யுவன்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை - விஷ்ணுவர்தன்
ஒரு நாள் என்னுடைய அப்பா, என்னிடம் ஷான் உன்னை பார்க்க வேண்டும் என்று கூறுகிறான் என்று சொன்னார். எனக்கு இவர் ஏன் நம்மை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்று சந்தேகம் வந்தது. - விஷ்ணு வர்தன்!
(1 / 7)
அஜித்தின் "பில்லா " "ஆரம்பம்" உள்ளிட்ட படங்கள் மூலம் நட்சத்திர இயக்குநராக மாறிய இயக்குந ர் விஷ்ணுவர்தனின் முதல் படம் எவ்வளவு இடையூறுகளுக்கு மத்தியில் வெற்றி பெற்றது என்பது குறித்து அவரே டூரிங் டாக்கிஸ் சேனலுக்கு பேசியிருக்கிறார். அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம்அதில் அவர் பேசும் போது, "நான் அந்த சமயத்தில் எப்படியாவது படம் இயக்க வேண்டும் என்று சுற்றிக்கொண்டிருந்தேன்.அப்போதுதான் என்னுடைய அப்பாவினுடைய பிசினஸ் பார்ட்னர் ஷான், அவருடைய மனைவியின் வாய்ஸ் நோட்டை ஒரு சேனலுக்காக எடுத்துக் கேட்டார். நானும் அவர் அப்பாவினுடைய நண்பர் என்பதால் செய்து கொடுத்தேன்.
(2 / 7)
இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் என்னுடைய அப்பா, என்னிடம் ஷான் உன்னை பார்க்க வேண்டும் என்று கூறுகிறான் என்று சொன்னார். எனக்கு இவர் ஏன் நம்மை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்று சந்தேகம் வந்தது.
(3 / 7)
அப்பாவின் நண்பர் கொடுத்த வாழ்க்கை.. இருப்பினும், நான் அவரைச் சென்று சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு, நான் படம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். அதை கேட்டவர் நாம் ஒரு படம் செய்யலாமே என்று சொன்னார். எனக்கு அப்படியே தூக்கி வாரி போட்டுவிட்டது.
(4 / 7)
காரணம் என்னவென்றால், அப்போது என்னுடைய கதையை யாருமே படமாக்க முன்வரவில்லை. அந்த சமயத்தில் இவர் இப்படி சொன்னதும் என்னால் முதலில் பதில் சொல்ல முடியவில்லை. அதன் பின்னர் படத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டார். ஒர்க் அவுட் செய்தேன்..! நான் ஒர்க் அவுட் செய்து சொல்கிறேன் என்று கூறி வந்து விட்டேன். அதன் பின்னர் கதை சொல்ல அனுமதி கேட்டேன். அவர் கதையெல்லாம் வேண்டாம் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். இருப்பினும் வலுக்கட்டாயமாக 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் கதையை நான் அவரிடம் கூறினேன். கதை அவருக்கு மிகவும் பிடித்து போனது. இதையடுத்து அவர் படத்திற்கான தொகையை கொடுத்தார். என்னுடைய அப்பாவே முழு ப்ரொடக்ஷன் சம்பந்தமான வேலைகளையும் கவனித்த காரணத்தால், ஷானுக்கு கூடுதல் சந்தோஷமாகிவிட்டது. இதற்கிடையில், நான் படம் தோற்றுப் போனால் அதற்கான பணத்தை உங்களுக்கு திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று ஷானிடம் சொன்னேன். இதைக் கேட்ட என்னுடைய அப்பா என்னை பயங்கரமாக திட்டினார். இருப்பினும் அது நடந்தது. தியேட்டரில் ஆர்யாநான் ஆர்யாவை தியேட்டரில் வைத்து சந்தித்தேன். அவரைப் பார்த்ததும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அப்போது அவரது முதல் படம் பிரச்சினையில் சிக்கியிருந்த சமயம்.
(5 / 7)
அவரை சந்தித்து நான் உன்னை வைத்து படம் செய்கிறேன் என்று கூறினேன். அதைக் கேட்ட ஆர்யா, உண்மையிலேயே என்னை வைத்து படம் எடுக்கப்போகிறாயா என்று கேட்டார்.
(6 / 7)
ஏன் இப்படி கேட்கிறாய் என்று கேட்ட பொழுது, என்னை எல்லோரும் ராசி இல்லாதவன் என்று கூறி படம் செய்ய மறுக்கிறார்கள் என்று கூறினான். உடனே நான், என்னையும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை; நாம் படம் செய்யலாம் என்று சொல்லி ஆர்யாவை அந்த படத்தில் கமிட் செய்தேன். அதன் பின்னர் பிரகாஷ் ராஜிடம் கதையை சொன்னேன் அவருக்கும் கதை பிடித்து விட்டது. அப்படித்தான் அந்த படம் நடந்தது. அந்தப் படம் முடிந்து படம் பிரசாத் லேபில் விநியோகஸ்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது.படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள், இந்த படம் ஓடாது என்று கூறி வாங்க மறுத்து விட்டார்கள். அன்று என்னுடைய தயாரிப்பாளர் ஷானும் படத்தை பார்த்தார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு உங்களை நான் ஆபீஸில் பார்க்கிறேன் என்று கூறி சென்று விட்டார்.ஒமேகா வாட்ச்அடுத்த நாள் நான் அவரை பார்க்கச் சென்றேன். எனக்கு அவர் ஒமேகா வாட்சை பரிசளித்து, படம் பெரிதாக யாருக்கும் பிடிக்கவில்லை ஆனால் எனக்கு படம் மிக மிக பிடித்திருந்தது. அதனால் உங்களுக்கு இந்த கிஃப்ட் என்று கூறினார். அதை பார்த்தவுடன் நான் மிகவும் எமோஷனல் ஆகிவிட்டேன். பின்னர் நடப்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.அதனைத் தொடர்ந்து நிறைய விநியோகஸ்தர்களுக்கு படத்தை இலவசமாக கொடுத்து படம் ரிலீஸ் ஆனால் போதும் என்ற ரீதியில் நாங்கள் செயல்பட்டோம். படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. ஆம், யுவன் மெட்டமைத்த "தீப்பிடிக்க" பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. நான் எல்லோரும் படத்தை வாங்க முன் வந்தார்கள். என்னுடைய படம் ரிலீஸ் ஆன அன்று நடிகர் ரஜினிகாந்தின் சந்திரமுகி திரைப்படமும் வெளியானது..நான் அந்த படத்திற்கு சென்று விட்டேன்.
மற்ற கேலரிக்கள்