Indian 2 box office: தன்னந்தனியாக கதறும் தாத்தா… பிதற்றிய பிரமாண்டம்.. கசக்கிய கமல்.. - இந்தியன் 2 வசூல் இவ்வளவுதானா?
Indian 2 box office: கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் 2 நாளில் வெறும் 42.3 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது. - வசூல் விபரம் இங்கே!
(1 / 6)
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் நடிப்பில் அண்மையில் வெளியான இந்தியன் 2 திரைப்படம், வசூலில் சரிவை கண்டு இருக்கிறது. Sacnilk.com வெளியிட்டு இருக்கும் தகவலின் படி, இப்படம் இதுவரை 42 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது என்பது தெரியவந்திருக்கிறது.
இந்தியாவில் ‘இந்தியன் 2’ எவ்வளவு வசூல்?
Sacnilk.com வெளியிட்டு இருக்கும் தகவலின் படி, இந்தியன் 2 திரைப்படம் வெளியான அன்றைய தினம் அந்தப்படம், தமிழில் 16.5 கோடி ரூபாயும், இந்தியில் 1.2 கோடி ரூபாயும்,தெலுங்கில் 7.9 கோடியும் வசூல் செய்திருக்கிறது.
(2 / 6)
இரண்டாவது நாளில், தமிழில் 13.5 கோடி ரூபாயும், இந்தியில் 1.2 கோடி ரூபாயும், தெலுங்கில் 2.5 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது.
(3 / 6)
மொத்தமாக பார்க்கும் போது, இரண்டு நாட்களில் இந்தியன் 2 திரைப்படம், தமிழில் 29.3 கோடி ரூபாயும், ஹிந்தியில் 2.4 கோடி ரூபாயும், தெலுங்கில் 10.4 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது.
(4 / 6)
ஆக மொத்தத்தில், இந்தியன் 2 திரைப்படம் 2 நாளில் வெறும் 42.3 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
(5 / 6)
இந்தியன் முதல் பாகத்தில், லஞ்சம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும், இந்தியன் தாத்தா கொல்வதை மைய கருவாக வைத்து கதை சொல்லி இருந்தார் இயக்குநர் ஷங்கர். தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாம் பாகத்திலும், அதுதான் மையக்கரு. ஒரே வித்தியாசம்,
தற்போதைய தலைமுறையில் லஞ்சத்தால் ஏற்படும் பிரச்சினைகளை கருவாக எடுத்து காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார். அவ்வளவுதான்.
அந்த பிரச்சினை சம்பந்தமான காட்சிகளை சித்தார்த்தையும், அவர் நடத்தி வரும் யூ- டியூப் சேனல் மூலமாகவும் நகர்த்தி இருக்கும் ஷங்கர், அதன் மூலமாக, பல்லாண்டுகளுக்கு முன்னதாக தாய்பேய்க்கு சென்ற
மற்ற கேலரிக்கள்