அப்போ இந்த பொங்கல் அப்பா vs பொண்ணா? பொங்கலுக்கு மோத இருக்கும் அப்பா மற்றும் மகள்!
- நடிகர் அஜித்தின் விடாமுயற்சி பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கியதை தொடர்ந்து பல படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
- நடிகர் அஜித்தின் விடாமுயற்சி பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கியதை தொடர்ந்து பல படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
(1 / 6)
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் எனக் கூறப்படும் ஷங்கர் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவரது இரண்டாவது மகள் தான் அதிதி சங்கர். டாக்டர் பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் சினிமாவில் நடிகையாக வேண்டும் என அதிக ஆசையில் இருந்தார்.
(2 / 6)
அதிதியின் தீராத ஆசையால் இயக்குனர் முத்தையா இயக்கி கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். மேலும் யுவன் இசையில் மதுர வீரன் பாடலையும் பாடி இருந்தார். அதிதி ஷங்கரின் அழகால் பல ரசிகர்கள் இருந்த போதிலும், போது நிகழ்ச்சிகளில் அவர் பேசிய விதம் விமர்சனத்திற்கு உள்ளானது, க்ரிஞ் என வசைப்பாட பட்டார். ஆனால் சிவ கார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
(3 / 6)
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் த்ரிஷா நடித்துள்ள படம் விடாமுயற்சி. இந்த பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப் போனது. ஆனால் இப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியாதல் பல படங்கள் பொங்கல் நாளில் வெளியாக உள்ளது.
(4 / 6)
நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி இணைந்து நடித்துள்ள படம் நேசிப்பாயா, இப்படத்தை இயக்குனர் விஷ்ணு வர்தன் இயக்கியுள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படமும் ஜனவரி 14 அன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது ஆகாஷ் முரளியின் அறிமுக படமாகும்.
(5 / 6)
இந்த நிலையில் ஜனவரி பொங்கலை ஒட்டி இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படமும் வெளியாக உள்ளது. எனவே இந்த பொங்கலில் அப்பா மற்றும் மகள் இருவரின் படமும் மோத உள்ளது. இந்த பொங்கல் அப்பா vs மகள் என்று வரப் போகிறது.
மற்ற கேலரிக்கள்