Rajinikanth: ‘உங்க டைரக்ஷன்ல நடிக்கணும்’; கேட்டு வாங்கிய ரஜினி.. வாட்டி எடுத்த மணிரத்னம்’ - ரஜினி தளபதி ஆன கதை
Rajinikanth: ரஜினி பீக்கில் இருந்த சமயம் அது. மணிரத்னம், ஊட்டியில் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்ற பாடலை, காலை 5 1/2 மணிக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார். - ரஜினி தளபதி ஆன கதை
(1 / 7)
Murali Abbas interview: ‘உங்க டைரக்ஷன்ல நடிக்கணும்’; கேட்டு வாங்கிய ரஜினி.. வாட்டி எடுத்த மணிரத்னம்’ ரஜினி தளபதி ஆன கதை
(2 / 7)
Director Murali Abbas: தளபதி படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை அந்தப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் முரளி அப்பாஸ் குமுதம் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “நடிகர் ரஜினிகாந்த் அந்த சமயத்தில் மார்க்கெட்டில் நம்பர் ஒன் நடிகராக இருந்த போதும், அவர் ஒரு இளம் நடிகராக, கற்றுக்கொள்ளும் இடத்தில் இருந்தார். மணிரத்னம் ‘அஞ்சலி’ என்ற படத்தை அப்போது இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில், ரஜினி மணிரத்னத்தை குறிப்பிட்டு, இரண்டு வயது குழந்தையை நீங்கள் இப்படி நடிக்க வைத்திருக்கிறீர்களே..
(3 / 7)
கோரிக்கை வைத்த ரஜினி:
தயவுசெய்து நீங்கள் என்னையும் வைத்து ஒரு படம் எடுங்கள் என்று மிகவும் தாழ்மையாக கேட்டுக் கொண்டார். அவர் அப்படி கேட்டதுதான் ‘தளபதி’ என்ற படமாக மாறியது. அந்த சமயத்தில் மற்ற படங்களிலெல்லாம் அவரை, மாலை 6 மணிக்கெல்லாம் அனுப்பி விடுவார்கள். அவர் செட்டிற்கு வந்தால், அவருடைய காட்சிகளை முதலில் எடுத்து விட்டு தான், மற்றவர்களுக்கான காட்சிகளை எடுப்பார்கள்.
(4 / 7)
அப்படி ரஜினி பீக்கில் இருந்த சமயம் அது. மணிரத்னம், ஊட்டியில் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்ற பாடலை, காலை 5 1/2 மணிக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்.அது டிசம்பர் மாதம் வேறு கடுமையான குளிர், இருந்த போதும் ரஜினி போர்வையை சுற்றிக்கொண்டு எல்லோருக்கும் முன்னர் அங்கு வந்து அமர்ந்திருப்பார். அந்த படத்தில் அவர் அவ்வளவு சின்சியராக வேலை செய்தார்.
(5 / 7)
ரஜினி நடிக்க முடியாமல் சிரமப்பட்டது:
அந்தப் படத்தில் மணிரத்னம் எடுக்கும் காட்சிகளில், அவர் எதிர்பார்த்தபடி ரஜினியால் நடிக்க முடியாமல் சிரமப்பட்டது உண்மைதான். அதனை தொடர்ந்துதான் அவர் கமலிடம் போன் செய்து, மணிரத்னத்தை தன்னால் சமாளிக்க முடியவில்லை என்று புலம்பினார். அந்த படப்பிடிப்பு நடந்த சமயத்தில் சொல்லும்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
மைசூரில் கே ஆர்சன் என்ற ஒரு ரவுண்டானா இருக்கிறது. அங்கு நாங்கள் சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கி கொண்டிருந்தோம். காட்சியின் படி, ரஜினிகாந்த் ஒரு காவல் அதிகாரியின் கையை வெட்ட வேண்டும். அதன் படிக்கட்டில் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். திடீரென்று ரஜினி மணிரத்னத்தை அழைத்து, மணி சார் நான் இந்த இடத்தில் தூங்கி இருக்கிறேன் என்று கூறினார்.
(6 / 7)
ரஜினி செய்த சம்பவம்:
உடனே, அவர் எப்படி என்று கேட்க, நான் கண்டக்டராக இருக்கும் பொழுது, பஸ்ஸை ஓட்டி முடித்துவிட்டு, இங்குதான் வந்து படுப்போம் என்று கூறினார். அவர் சொல்லிவிட்டு காட்சியில் நடிக்கச் சென்றுவிட்டார். இதனையடுத்து மணி சார் என்னிடம், என்ன இவர் இங்கு படுத்து இருக்கிறார் என்று சொல்கிறார் என்று கேட்டார். உடனே நான் நிச்சயம் படுத்திருப்பார் சார் என்று சொன்னேன்.
(7 / 7)
எப்படி என்று கேட்க, நாம் ஷூட்டிங் எடுப்பதற்கு முன்னதாக, இந்த இடத்தில் 7 பேர் படுத்திருந்தார்கள். அவர்களை எழுப்பி விட்டு தான் நாம் தற்போது ஷூட்டிங் செய்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னேன்.அன்று மாலை வெளிவந்த பேப்பரில், ரஜினியின் படப்பிடிப்பால் சாலையில் போக்குவரத்து நெரிசல் என்று செய்தி வந்தது. அந்த இடத்தில் படுத்திருந்த மனிதனுக்கு, இந்த இடத்திற்கு வருவோம் என்று தெரியாது. வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமானது” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்