‘ரஜினி ஒரு சுயநலவாதி.. ஆனா கமல் பொதுநலவாதி.. ரஜினிக்கு பணம் மேல கண்ணு’ - உடைத்து பேசும் இயக்குநர் கே.ஆர்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘ரஜினி ஒரு சுயநலவாதி.. ஆனா கமல் பொதுநலவாதி.. ரஜினிக்கு பணம் மேல கண்ணு’ - உடைத்து பேசும் இயக்குநர் கே.ஆர்!

‘ரஜினி ஒரு சுயநலவாதி.. ஆனா கமல் பொதுநலவாதி.. ரஜினிக்கு பணம் மேல கண்ணு’ - உடைத்து பேசும் இயக்குநர் கே.ஆர்!

Dec 30, 2024 07:51 AM IST Kalyani Pandiyan S
Dec 30, 2024 07:51 AM , IST

நடிகர்கள் கெரியரின் உச்சத்தை தொடும் பொழுது, புகழ் போதை அவர்களை தள்ளாட வைத்து, குழப்பத்திற்குள் தள்ளிவிடும் ஆனால் அதற்குள் எல்லாம் சிக்காமல் இன்றும் தன்னை கட்டுப்படுத்தி, தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அது பெரிய விஷயம் - கே.ஆர்!

ரஜினி சார் சுயநலவாதி என்றும் கமல் ஒரு பொதுநலவாதி என்றும் பிரபல இயக்குநர் கே.ஆர் பேசி இருக்கிறார். ரஜினி சார் ஒரு சுயநலவாதிஇது குறித்து அவர் மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு பேசும் போது, ‘ரஜினி சார் ஒரு சுயநலவாதி; அவர் எப்போதும் அவர் ஜெயிக்க வேண்டும், அவரை நம்பி காசு போட்ட தயாரிப்பாளர் ஜெயிக்க வேண்டும். படம் வாங்கியவர்கள் ஜெயிக்க வேண்டும்.சம்பளம் சரியாக வர வேண்டும் உள்ளிட்டவற்றை பற்றி மட்டுமே யோசிப்பார். அது அவருக்கு சரியான விஷயம்; அதனால், அதை அவர் செய்கிறார். உண்மையில் அவர் ஒரு நாளில் சுருக்கி காட்சிகளை எடுத்தால் கூட, நல்லது என்றுதான் நினைப்பார்.ஆனால் கமல் பொதுநலவாதி. அவர் தொடர்ந்து பரிச்சாத்த முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருப்பார். அந்த படம் ஓடுகிறதோ ஓடவில்லையோ அவர் அவருக்கான பாணியில் பயணம் செய்து கொண்டே இருப்பார். குறிப்பாக, அவர் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஜெயிக்க வேண்டும் தமிழ் சினிமா அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று யோசிப்பார்.  

(1 / 6)

இயற்கை கொடுத்த பரிசு!தமிழ் சினிமாவில் பல விஷயங்களை தொடங்கியதும் அறிமுகப்படுத்தியதும் அவர்தான். விக்ரம் படத்தின் போது கூட, அவருக்கு வேறு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை; அவரே, தன்னுடைய ராஜ்கமல் பேனரில் படத்தை தயாரித்தார்; ஒன் லைனையும் அவரே லோகேஷிடம் கொடுத்தார். லோகேஷ் அதை நன்றாக டெவலப் செய்து படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றினார்; இது அவருக்கு இயற்கை கொடுத்தது.  

(2 / 6)

பொருளாதாரமும் பெருகும்கமலுக்கும் ரஜினிக்கும் போட்டியிருப்பது உண்மைதான். அது எப்படி உருவானது என்றால், பஞ்சு அருணாச்சலம் ஒருமுறை இருவரையும் அழைத்து, நீங்கள் இருவரும் தனித்தனியாக படங்கள் செய்யும் பட்சத்தில், நிறைய தொழிலாளர்கள் நன்றாக இருப்பார்கள்; 

(3 / 6)

பொருளாதாரமும் பெருகும் என்று கூறியிருக்கிறார். அதன் பின்னர் கமல் சாரும் ரஜினி சாரும் கலந்து பேசி அந்த முடிவுக்கு வந்திரார்கள்.அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. இப்போதும் இருக்கிறது; ரசிகர்கள் தான் சண்டை போட்டுக் கொள்கிறார்களே தவிர அவர்களிடம் எந்த நெருடலும் இல்லை.  

(4 / 6)

புகழ் போதை தள்ளாட வைத்து விடும் நடிகர்கள் அவர்களுடைய கெரியரின் உச்சத்தை தொடும் பொழுது, அதை தக்க வைத்துக் கொள்வது என்பது மிக மிக கடினமான விஷயம். 

(5 / 6)

காரணம் என்னவென்றால், நடிகர்கள் கெரியரின் உச்சத்தை தொடும் பொழுது, புகழ் போதை அவர்களை தள்ளாட வைத்து, குழப்பத்திற்குள் தள்ளிவிடும் ஆனால் அதற்குள் எல்லாம் சிக்காமல் இன்றும் தன்னை கட்டுப்படுத்தி, தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அது பெரிய விஷயம்’ என்று பேசினார். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்