Bhagyashri Borse: முதல் பட கதை..இயக்குநர் சொன்ன விஷயம் - குண்டை தூக்கி போட்ட பாக்யஸ்ரீ போர்ஸ்!தெலுங்கு சினிமா Sensation
- Bhagyashri Borse: கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா கலவையாக கொள்ளை அழகில் கிறங்கடித்து வருபவராக இருக்கிறார் தெலுங்கு சினிமாவின் புதிய சென்சேஷனாக இருக்கிறார் பாக்யஸ்ரீ போர்ஸ்
- Bhagyashri Borse: கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா கலவையாக கொள்ளை அழகில் கிறங்கடித்து வருபவராக இருக்கிறார் தெலுங்கு சினிமாவின் புதிய சென்சேஷனாக இருக்கிறார் பாக்யஸ்ரீ போர்ஸ்
(1 / 7)
தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா என்று அழைக்கப்படும் ரவிதேஜா நடித்திருக்கும் புதிய படமான மிஸ்டர் பச்சான் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் பாக்யஸ்ரீ போர்ஸ். இந்த படம் வெளியாவதற்கு முன்பே தனது அழகு, கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறார் நடிகை பாக்யஸ்ரீ
(2 / 7)
ரவிதேஜா - பாக்யஸ்ரீ இணைந்து நடித்திருக்கும் மிஸ்டர் பச்சான் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. தெலுங்கு சினிமாவின் கமர்ஷியல் பட இயக்குநரான ஹரிஷ் ஷங்கர் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் புரோமோஷன் ஒன்னு விடாமல் நடிகை பாக்யஸ்ரீ பங்கேற்று தனது இனிமையான குரலாலும் படம் பற்றி பல விஷயங்களை பேசி வருகிறார்
(3 / 7)
மிஸ்டர் பச்சான் பட நிகழ்ச்சியின் போது, படத்தின் கதையை கேட்டவுடன் என்ன நினைத்தீர்கள் என பாக்யஸ்ரீயிடம் நிருபர் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இந்த படத்தின் கதையை தன்னிடம் சொல்லவே இல்லை என குண்டை தூக்கி போட்டுள்ளார். இதை கேட்ட அனைவருக்கும் பாக்யஸ்ரீ பதில் ஆச்சர்யம் அளிக்கும் விதமாகவே இருந்தது
(4 / 7)
ஹரிஷ் சங்கர் இந்த படத்தின் எனது கதாபாத்திரம் குறித்து விவரித்தார். மற்றபடி கதையை சொல்லவில்லை. எனது கதாபாத்திரம் வெகுவாக பேசப்படும் என நம்பிக்கை அளித்தார். இந்த படம் மீது அவர் வெளிப்படுத்திய ஆர்வத்தால் கதை கூட முழுவதுமாக கேட்காமல் நடிக்க சம்மதித்தேன் என்றார்
(5 / 7)
மிஸ்டர் பச்சான் படத்தில் நடித்ததன் மூலம் சிறப்பான முடிவை எடுத்திருப்பதாக உணர்கிறேன். இந்த படத்தில் நடித்தற்காக பெரு மகிழ்ச்சி அடைகிறேன். வித்தியாசமான கதையமைப்பு ஷுட்டிங்கில் நடிக்கும்போது தெரிந்தது என்றார்
(6 / 7)
1980களின் பின்னணியில், பெரும் தொழில் அதிபர்கள் மீது நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனையை அடிப்படையாக கொண்டு மிஸ்டர் பச்சான் படம் உருவாகியுள்ளது. தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாகவும் உள்ளது. அதுவும் பட வெளியீட்டுக்கு முன்னரே பாக்யஸ்ரீ போர்ஸ் தரிசனத்தை பார்க்க கோடானு கோடி ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்
மற்ற கேலரிக்கள்