‘அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்ப ஷகிலாதான் எல்லாமே செஞ்சாங்க.. அவ்வளவு தானம் தர்மம் பண்றாங்க’ -ஷர்மிளா பேட்டி!
இருவருக்கும் ஒரே ஸ்டூடியோவில் ஷூட்டிங்..பக்கத்து பக்கத்து ரூமில்தான் நானும் அவரும் தங்கி இருந்தோம். நீண்ட நேரமாக என்னுடைய ரூமின் சாவி வராதால், நான் என்னுடைய ரூமிற்கு வெளியே காத்துக் கொண்டிருந்தேன்
(1 / 6)
ஷகிலாவும் தானும் நண்பர்கள் ஆன கதையை நடிகை ஷர்மிளா அண்மையில் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருந்தார்.
அந்தப்பேட்டியில் அவர் பேசியதாவது, ‘ஷகிலாவுக்கும் எனக்குமான அறிமுகம் ஒரு கருத்து வேறுபாட்டில் தான் ஆரம்பித்தது. ஆனால், அதன் பின்னர் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டோம். ஆம், முதலில் ஷகிலாவை பற்றி நாந்தான் ஒரு பேட்டியில், இந்தப்பெண் ஏன் இவ்வளவு மோசமாக நடிக்கிறார் என்று கூறி பேட்டி கொடுத்தேன்; இந்த பேட்டியை ஷகிலாவும் படித்தார். அதற்கு ரிப்ளை கொடுத்த ஷகிலா அல்லாஹ் ஆசீர்வதிக்கட்டும் என்று பதிலடி கொடுத்தார்.
(2 / 6)
மீண்டும் பேட்டி
மீண்டும் ஒரு பேட்டியில் அவரைப்பற்றி மிக மோசமாக பேட்டி கொடுத்தேன்; அதற்கு ஷகிலா, ஷர்மிளாவுக்கு பசி ஒரு பிரச்சினை இல்லை... பணம் ஒரு பிரச்சினை இல்லை.. ஆகையினால் கடவுள் அவரை அப்படியே ஆசீர்வதிக்கட்டும் என்று பதிலடி கொடுத்தார்.
இதைக் கேட்டவுடன் இந்த பெண் உண்மையிலேயே நமக்கு பதில் கொடுக்கிறதா? இல்லை நம்மை அவமானப்படுத்துகிறதா, இல்லை இந்தப் பெண் ஒரு சாமியாரா என்று கேள்வி எனக்கு வந்தது. இந்த நிலையில் ஸ்டூடியோ ஒன்றில் இருவரும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
(3 / 6)
இருவருக்கும் ஒரே ஸ்டூடியோவில் ஷூட்டிங்..பக்கத்து பக்கத்து ரூமில்தான் நானும் அவரும் தங்கி இருந்தோம். நீண்ட நேரமாக என்னுடைய ரூமின் சாவி வராதால், நான் என்னுடைய ரூமிற்கு வெளியே காத்துக் கொண்டிருந்தேன்
(4 / 6)
யாரும் சொல்ல வில்லை
அப்போது அங்கிருந்த ஒருவர் அருகில் உள்ள ரூமில் சென்று அமர்ந்து கொள்ளுமாறு கூறினார். இந்த நிலையில் நானும் அங்கு சென்று அமர்ந்து விட்டேன். அப்போது உள்ளே ஷகிலா இருக்கிறார் என்பதை யாரும் சொல்லவில்லை.
என்னாலும் அவரை சரியாக அடையாளம் காண முடியவில்லை. நான் சென்று உட்கார்ந்ததும் எதிரே வந்து அமர்ந்த ஷகிலா நான்தான் ஷகிலா.. என் மீது உங்களுக்கு அப்படி என்ன கோபம்... எதற்காக என்னை இப்படி திட்டி பேட்டி கொடுக்கிறீர்கள் என்று கேட்டார்.
(5 / 6)
தொடர்ந்து அவரது குடும்பச் சூழ்நிலையையும், எதற்காக இப்படிப்பட்ட படங்களில் நடிக்கிறார் என்பதையும் விளக்கினார். அப்போதுதான் செல்வாக்கினால் வந்த எனக்கு அவருடைய கஷ்டம் புரிந்தது;
மற்ற கேலரிக்கள்