Sivakarthikeyan: ‘நீங்க வாழ்க்கை கொடுத்தீங்களா? நான் அந்த மாதிரி ஆள் கிடையாது!’ - தனுசை உள்குத்து குத்திய சிவா?-did sivakarthikeyan take a dig at dhanush here what the actor said about introducing new talents - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sivakarthikeyan: ‘நீங்க வாழ்க்கை கொடுத்தீங்களா? நான் அந்த மாதிரி ஆள் கிடையாது!’ - தனுசை உள்குத்து குத்திய சிவா?

Sivakarthikeyan: ‘நீங்க வாழ்க்கை கொடுத்தீங்களா? நான் அந்த மாதிரி ஆள் கிடையாது!’ - தனுசை உள்குத்து குத்திய சிவா?

Aug 13, 2024 07:59 PM IST Kalyani Pandiyan S
Aug 13, 2024 07:59 PM , IST

Sivakarthikeyan: நான் யாரையும் கண்டுபிடித்து நான்தான் இவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன்.இவர்களை நான் தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கி விட்டார்கள். ஆனால் நான் அந்த மாதிரியான ஆள் கிடையாது. - சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan: கூழாங்கல் புகழ் வினோத் ராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கொட்டுக்காளி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.ராட்டர்டாம் விருது விழாவில் விருது பெற்றதுஅவர் பேசும் போது, “ அருண்தான் முதலில் எனக்கு வினோத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் கூழாங்கல் படத்தை எடுத்திருந்தார். அந்த படம் ஏதோ காரணங்களுக்காக ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இதற்கிடையே அந்த திரைப்படம் ராட்டர்டாம் விருது விழாவில் விருது பெற்றது என்றும் இந்த விருதான அறிமுக இயக்குநர்களுக்கு கொடுக்கப்படும் விருது என்றும் இதில் உலகில் உள்ள அனைத்து படங்களுக்கு போட்டிப்போடும் என்றும் அருண் கூறினார். மேலும் இந்த விருதை முன்னதாக பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் வாங்கி இருப்பதாகவும் சொன்னார். அதைக்கேட்ட உடன் நான் அப்படியே ஆடிப்போய்விட்டேன். இதையடுத்து வினோத்திடம் பிரதர், உங்களுக்கு எந்த ஊர் என்று கேட்க, அவர் மதுரை தான் என்றார். நான் அப்படியே அதிர்ச்சியாகி நின்று விட்டேன். மதுரையில் இருந்து வந்த ஒருவர், இவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறார். இதனை பெரிய கொண்டாட்டமாக மாற்றி இருக்க வேண்டுமே என்று நினைத்தேன். இதனையடுத்து நான் வினோத்திடம் உங்களின் அடுத்த படத்தை நான் தயாரிக்கிறேன். அது என்ன கதையாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும் என்றேன். அப்படி நான் சொன்னதற்கான ஒரே காரணம், வினோத் ராஜ் என்ற ஒருவரை கொண்டாட வேண்டும் என்பதற்காக மட்டும்தான்.

(1 / 5)

வினோத்திடம் பிரதர், உங்களுக்கு எந்த ஊர் என்று கேட்க, அவர் மதுரை தான் என்றார். நான் அப்படியே அதிர்ச்சியாகி நின்று விட்டேன். மதுரையில் இருந்து வந்த ஒருவர், இவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறார். இதனை பெரிய கொண்டாட்டமாக மாற்றி இருக்க வேண்டுமே என்று நினைத்தேன். இதனையடுத்து நான் வினோத்திடம் உங்களின் அடுத்த படத்தை நான் தயாரிக்கிறேன். அது என்ன கதையாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும் என்றேன். அப்படி நான் சொன்னதற்கான ஒரே காரணம், வினோத் ராஜ் என்ற ஒருவரை கொண்டாட வேண்டும் என்பதற்காக மட்டும்தான்.வினோத் இந்த படத்தில் எல்லாவிதமான அரசியலையும் பேசியிருக்கிறார்.      

(2 / 5)

ஆனால் எதையும் அவர் கருத்தாக திணிக்கவில்லை. நான் யாரையும் கண்டுபிடித்து நான்தான் இவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன். 

(3 / 5)

இவர்களை நான் தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கி விட்டார்கள். ஆனால் நான் அந்த மாதிரியான ஆள் கிடையாது. 

(4 / 5)

இந்தப்படம் வெற்றி அடைந்து எனக்கு லாபம் வந்தால், அந்த லாபத்தை எடுத்து வினோத்தின் அடுத்த படத்திற்கான முன் பணமாக நான் கொடுப்பேன். அடுத்து உங்களுக்கு என்ன படம் எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை எடுங்கள். அந்தப் படத்திலும் நான் லாபம் கிடைத்தால், வினோத் ராஜ் போன்ற இயக்குநர்களை தேடி கண்டுபிடித்து, அவர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பேன். அதை கண்டுபிடித்து தருவதற்கு எனக்கு அருண் இருக்கிறார்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்