Buddha Birthday: புத்தரின் பிறந்த நாள்: மியான்மரின் தங்க ஸ்தூபி ஆலயத்தில் ஒன்று கூடும் பக்தர்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Buddha Birthday: புத்தரின் பிறந்த நாள்: மியான்மரின் தங்க ஸ்தூபி ஆலயத்தில் ஒன்று கூடும் பக்தர்கள்

Buddha Birthday: புத்தரின் பிறந்த நாள்: மியான்மரின் தங்க ஸ்தூபி ஆலயத்தில் ஒன்று கூடும் பக்தர்கள்

Published May 22, 2024 08:45 PM IST Marimuthu M
Published May 22, 2024 08:45 PM IST

  • Buddha Birthday: மியான்மரில் யாங்கூன் நகரில், மே 22ஆம் தேதி, கசோனின் முழு நிலவு நாளில் வரும் புத்தரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் பௌத்தர்கள் ஷ்வேடகன் பகோடா என்னும் தங்கஸ்தூபி ஆலயத்திற்கு வருகை தருகிறார்கள்.

மே 23ஆம் தேதி புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இது புத்தரின் பிறந்தநாள் என்று கூறப்படுகிறது. இதனையொட்டி, ஞானத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் புனித போதி மரத்திற்கு நீர் ஊற்ற ஆயிரக்கணக்கான புத்த பக்தர்கள் மே 22ஆம் தேதி, மியான்மர் நாட்டில், புனிதமான தங்க ஸ்தூபியான ஷ்வேடகான் பகோடா ஆலயத்தில் ஒன்று கூடினர்.

(1 / 6)

(AFP)

ஷ்வேடகன் பகோடா ஆலயத்தில் உள்ள போற்றுதலுக்குரிய போதி மரத்தில் பக்தர்கள் தண்ணீர் ஊற்றுகிறார்கள். இது மக்களுக்கு ’’ஞானத்தைத் தந்த மரம்" என்றும் அழைக்கப்படுகிறது. போதி மரம் புத்த மதத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

(2 / 6)

மியான்மரின் யாங்கூனில் பூக்கள், மெழுகுவர்த்திகள் மற்றும் ஊதுபத்திகளை வழங்கும் கடைகள் நிறைந்த பகுதிகளில் மக்கள் நடந்து, படிக்கட்டுகளில் கூட்டம் கூட்டமாக ஏறி, யாங்கூனின் வர்த்தக மையத்தின் வானளாவிய உயரத்தில் உயர்ந்து நிற்கும் மலை உச்சி வளாகத்தை அடைந்தனர்.

(3 / 6)

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் புத்தர் ஞானம் பெற்ற மரத்தின் வேரிலிருந்து பதியம்போடப்பட்டு, மியான்மரின் யாங்கூனில் இருக்கும் போதி மரத்திற்கு நீர் ஊற்றுவதற்காக மக்கள் வரிசையாக நின்றனர்.

(4 / 6)

மியான்மர் நாட்டின் யாங்கூன் நகரின் நடுவே இருக்கும் தங்க முலாம் பூசப்பட்ட ஸ்வேடகன் பகோடா ஆலய கோபுரம் புத்த மதத்தினருக்கு முக்கியமானது, இது தரையில் இருந்து 325 அடி உயரத்தில் உள்ளது. இது புத்தரின் நான்கு நினைவுச்சின்னங்களை வைத்திருப்பதாக நம்பப்படுகிறது.

(5 / 6)

யாங்கூன் நகரில் இருக்கும் அந்த புத்த ஆலயத்தில் உள்ள சிறு சிறு ஆலயங்களில் அலங்கரிக்கப்பட்ட பரந்த பளிங்கு மேடையை மக்கள் அடைகின்றனர். அதன்பின், குடும்பங்கள் புத்த ஆலய வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தங்கள் காணிக்கைகளை வழங்கச் சென்றனர்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்