தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Dental Care : பளிச் புன்னகைக்கு உங்கள் பற்களை பாதுகாக்க வேண்டுமா? அதற்கு உதவக்கூடிய எளிய வீட்டுத்தீர்வுகள்!

Dental Care : பளிச் புன்னகைக்கு உங்கள் பற்களை பாதுகாக்க வேண்டுமா? அதற்கு உதவக்கூடிய எளிய வீட்டுத்தீர்வுகள்!

May 04, 2024 03:57 PM IST Priyadarshini R
May 04, 2024 03:57 PM , IST

  • Dental Care : பல் கூச்சத்துக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை பல் சொத்தை, நோய், மரபணு, பற்சிதைவு மற்றும் பல்வேறு காரணங்கள் உள்ளன. நீங்கள் அதிகளவில் சூடாகவோ அல்லது ஜில்லென்ற உணவை உட்கொள்ளும்போதோ அல்லது ஆசிட் உணவுகளை உட்கொள்ளும்போதோ பற்களின் வேர்களில் உள்ள நரம்புகள் தூண்டப்படும்.

கூச்ச சுபாவம் உள்ள பற்களுக்கென்று பிரத்யேகமான பற்பசைகள் உள்ளன. அவற்றில் பொட்டாசியம் நைட்ரேட் அல்லது ஃப்ளுரைட் இருக்கும். இவை நரம்பின் குழாய்களை அடைத்து வலியை குறைக்கும். எனினும், இதைப் பயன்படுத்துவதால், எரிச்சல் மற்றும் ருசியில் மாற்றம் ஆகியவை ஏற்படுகிறது. நீங்கள் இயற்கை தீர்வுகளை தேர்ந்தெடுப்பது சிறந்த தேர்வாக இருக்கும்.

(1 / 7)

கிராம்பு, கொய்யா இலைகள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு வைத்தியங்களை நீங்கள் கடைபிடிக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இவை பாதுகாப்பாக பற்கூச்சத்தை போக்கும்.

(2 / 7)

நீங்கள் கடினமாகவும், நீண்ட நேரமும் பற்களை ஃபிரஷ் செய்யும்போது, உங்கள் பற்களின் ஈறுகள் பாதிக்கப்படும். பற்களின் எனாமலை குறைக்கும். இதனால் ஈறுகளில் தேய்மானம் ஏற்படும். மேலும் பல் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

(3 / 7)

பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவு துகள்களை முறையாக நீக்குவது மிகவும் முக்கியம்.

(4 / 7)

நூல்களை வைத்து பற்களை சுத்தம் செய்வது பழைய முறை என்றாலும், டூத் பிக் வைத்து சுத்தம் செய்துகொள்ளுங்கள். அது பற்களை சுத்தம் செய்வதற்கு உரிய எளிய வழியாகும். பற்களை நன்றாக சுத்தம் செய்ய உதவுகிறது. பற்களில் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இது சிறந்த பலனைக்கொடுக்கிறது.

(5 / 7)

அதிக சர்க்கரை, ஆசிட் உணவுகள், பானங்கள் உங்கள் பற்களின் எனாமலுக்கு சேதத்தை ஏற்படுத்தி, உங்கள் பற்களில் கூச்சத்தை ஏற்படுத்தும். எனவே ஃபிரஷ் காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

(6 / 7)

உங்கள் பற்களை அவ்வப்போது மருத்துவரிடம் சென்று, தேவையான அளவு சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஈறுகளின் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கூறி நிவாரணம் பெறுங்கள். தேவையற்ற இடங்களில் உள்ள துவாரங்களை அடைத்துவிடுங்கள்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்