Parvesh verma: ’டெல்லியில் கெஜ்ரிவாலை வீழ்த்திய அரசியல் வாரிசு!’ அடுத்த முதல்வர் இவரா? யார் இந்த பர்வேஷ் வர்மா?
- Delhi Election Results: முன்னாள் டெல்லி முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான சாஹிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ், தேசிய தலைநகரில் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மாமா ஆசாத் சிங், வடக்கு டெல்லி மாநகராட்சியின் மேயராகப் பணியாற்றினார்.
- Delhi Election Results: முன்னாள் டெல்லி முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான சாஹிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ், தேசிய தலைநகரில் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மாமா ஆசாத் சிங், வடக்கு டெல்லி மாநகராட்சியின் மேயராகப் பணியாற்றினார்.
(1 / 7)
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளார். டெல்லி முதலமைச்சர் பதவிக்கு இவரது பெயரையும் பாஜக பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
(Vipin Kumar)(2 / 7)
நவம்பர் 7, 1977 இல் பிறந்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா அரசியல் குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர். ஆர்.கே. புரத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் பள்ளிக்கல்வியையும், டெல்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியில் உயர்கல்வியையும் பயின்றார். ஃபோர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.
(HT_PRINT)(3 / 7)
முன்னாள் டெல்லி முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான சாஹிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ், தேசிய தலைநகரில் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மாமா ஆசாத் சிங், வடக்கு டெல்லி மாநகராட்சியின் மேயராகப் பணியாற்றினார், மேலும் 2013 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் முன்ட்கா விதான் சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
(PTI)(4 / 7)
2014, 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வென்று எம்பி ஆன வர்மா, 2024 தேர்தலில் போட்டியிடாமல் இருந்தார்.
(PTI)(5 / 7)
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கான கூட்டுக் குழுவின் உறுப்பினராகவும், நகர்ப்புற மேம்பாட்டிற்கான நிலைக்குழுவின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றி உள்ளார்.
(PTI)(6 / 7)
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் நெருக்கமான் தொடர்பை கொண்டுள்ள வர்மா, சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவாலை "பயங்கரவாதி" என்று அழைத்ததைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தால் 24 மணி நேரம் பரப்புரை செய்ய தடை செய்யப்பட்டார்.
மற்ற கேலரிக்கள்