டெல்லி தேர்தல் முடிவுகள்: பாஜக ஆட்சியை கைப்பற்றிய நிலையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அதிஷி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  டெல்லி தேர்தல் முடிவுகள்: பாஜக ஆட்சியை கைப்பற்றிய நிலையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அதிஷி!

டெல்லி தேர்தல் முடிவுகள்: பாஜக ஆட்சியை கைப்பற்றிய நிலையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அதிஷி!

Published Feb 09, 2025 02:17 PM IST Karthikeyan S
Published Feb 09, 2025 02:17 PM IST

  • Delhi Election Results: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதல்வர் அதிஷி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். துணை நிலை ஆளுநர் வி.கே. சக்‌சேனாவிடம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் வென்று வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. வெறும் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இதனால் அதிஷி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

(1 / 7)

(Image:RajNiwasDelhi )

டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளான இன்று டெல்லி முதல்வர் அதிஷி, துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை இன்று காலையில் சந்தித்தார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு பதவியேற்கும் வரை முதல்வராக தொடர கேட்டுக்கொண்டார்.

(2 / 7)

(HT_PRINT)

டெல்லி கல்காஞ்சி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி, பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார். தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கல்காஜி தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

(3 / 7)

2025 டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற 5 பெண்களில், முன்னாள் முதல்வர் அதிஷியும் ஒருவர், மற்றவர்கள் பாஜகவைச் சேர்ந்த பெண் வேட்பாளர்கள். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெற்றி பெற்றிருக்கும் ஒரே பெண் அதிஷி என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 தேர்தலில் மொத்தம் 8 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

(4 / 7)

(Image: Mohan Lal)

மதுபான ஊழல் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், அதிஷியின் முன்னவருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் அதிஷி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(5 / 7)

(Hindustan Times)

2025 டெல்லி தேர்தலில்,  ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியவை தலா 9 பெண் வேட்பாளர்களை நிறுத்தின. காங்கிரஸ் கட்சி 7 பெண்களை போட்டியிட வைத்தது. கடந்த 2020 தேர்தலை விட இந்த முறை மூன்று கட்சிகளும் அதிக பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.

(6 / 7)

டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வென்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து டெல்லியின் மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல், தொடர் தோல்வியை பதிவு செய்துள்ளது.

(7 / 7)

(PTI)

மற்ற கேலரிக்கள்