Deepam Benefits: வீட்டில் எந்த கிழமை விளக்கு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Deepam Benefits: வீட்டில் எந்த கிழமை விளக்கு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் பாருங்க!

Deepam Benefits: வீட்டில் எந்த கிழமை விளக்கு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் பாருங்க!

Mar 06, 2024 09:05 AM IST Pandeeswari Gurusamy
Mar 06, 2024 09:05 AM , IST

பல பெருமைகளோடு திகழும் தீபத்திற்கு என்று தனி மகத்துவம் உண்டு. எந்தெந்த நாட்களில் தீபம் ஏற்றினால் என்னென்ன பிரச்னைகள் தீரும் என்பது குறித்து இங்கே காண்போம்.

விளக்கேற்றுவது என்பது நமது பாசிட்டிவ் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக செய்யப்படுகிறது. விளக்கேற்றுவதால் இருள் அகன்று ஒளி பரவுகிறது. அறியாமை என்னும் இருள் அகன்று அறிவு என்னும் ஒளி பரவ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே விளக்கேற்றப்படுகிறது.

(1 / 11)

விளக்கேற்றுவது என்பது நமது பாசிட்டிவ் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக செய்யப்படுகிறது. விளக்கேற்றுவதால் இருள் அகன்று ஒளி பரவுகிறது. அறியாமை என்னும் இருள் அகன்று அறிவு என்னும் ஒளி பரவ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே விளக்கேற்றப்படுகிறது.(Pixabay)

தீபத்தின் சுடரானது எப்போதும் மேல் நோக்கியே எரியும், அதுபோல எப்போதும் மனிதர்கள் நீதி தவறாமல் தங்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்ற அறிவுரையை தீபமானது உணர்த்துகிறது. தலைகீழாக தீபத்தை பிடித்தாலும் அதன் சுடர் மேல் நோக்கியே எரியும். அதுபோலத்தான் மனிதர்களும் இருக்க வேண்டும் என அது உணர்த்துகிறது.

(2 / 11)

தீபத்தின் சுடரானது எப்போதும் மேல் நோக்கியே எரியும், அதுபோல எப்போதும் மனிதர்கள் நீதி தவறாமல் தங்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்ற அறிவுரையை தீபமானது உணர்த்துகிறது. தலைகீழாக தீபத்தை பிடித்தாலும் அதன் சுடர் மேல் நோக்கியே எரியும். அதுபோலத்தான் மனிதர்களும் இருக்க வேண்டும் என அது உணர்த்துகிறது.(Pixabay)

அந்த வகையில் பல பெருமைகளோடு திகழும் தீபத்திற்கு என்று தனி மகத்துவம் உண்டு. எந்தெந்த நாட்களில் தீபம் ஏற்றினால் என்னென்ன பிரச்னைகள் தீரும் என்பது குறித்து இங்கே காண்போம்.

(3 / 11)

அந்த வகையில் பல பெருமைகளோடு திகழும் தீபத்திற்கு என்று தனி மகத்துவம் உண்டு. எந்தெந்த நாட்களில் தீபம் ஏற்றினால் என்னென்ன பிரச்னைகள் தீரும் என்பது குறித்து இங்கே காண்போம்.(Pixabay)

ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றினால், இறை சிந்தனை அதிகமாகும், பித்ரு தோஷம் நீங்கும், வயிறு, நரம்பு, இதயம் உள்ளிட்ட நோய்கள் அகலும் என கூறப்படுகிறது.

(4 / 11)

ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றினால், இறை சிந்தனை அதிகமாகும், பித்ரு தோஷம் நீங்கும், வயிறு, நரம்பு, இதயம் உள்ளிட்ட நோய்கள் அகலும் என கூறப்படுகிறது.(Pixabay)

திங்கட்கிழமை அன்று தீபம் ஏற்றினால் மனவளர்ச்சி சிக்கல்கள் நீங்கும், பயம், கவலை, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்டவை குறையும் எனக் கூறப்படுகிறது.

(5 / 11)

திங்கட்கிழமை அன்று தீபம் ஏற்றினால் மனவளர்ச்சி சிக்கல்கள் நீங்கும், பயம், கவலை, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்டவை குறையும் எனக் கூறப்படுகிறது.(Pixabay)

செவ்வாய்க்கிழமை தீபம் ஏற்றினால் செவ்வாய் தோஷம், கேதுவால் ஏற்படக்கூடிய சிக்கல்கள், பெண்களுக்கு திருமண தடை உள்ளிட்டவை நீங்கும் எனக் கூறப்படுகிறது.

(6 / 11)

செவ்வாய்க்கிழமை தீபம் ஏற்றினால் செவ்வாய் தோஷம், கேதுவால் ஏற்படக்கூடிய சிக்கல்கள், பெண்களுக்கு திருமண தடை உள்ளிட்டவை நீங்கும் எனக் கூறப்படுகிறது.(Pixabay)

புதன்கிழமை விளக்கேற்றினால் கல்வியில் இருக்கும் தடைகள் நீங்கும், ஞாபக மறதி சிக்கல் குறையும் எனக் கூறப்படுகிறது.

(7 / 11)

புதன்கிழமை விளக்கேற்றினால் கல்வியில் இருக்கும் தடைகள் நீங்கும், ஞாபக மறதி சிக்கல் குறையும் எனக் கூறப்படுகிறது.(Pixabay)

வியாழக்கிழமை விளக்கேற்றினால் குழந்தைகளால் ஏற்படக்கூடிய சிக்கல்கள், உத்திர தோஷம், குடும்ப சிக்கல்கள், ஆண்களுக்கு திருமண தடை உள்ளிட்டவை விளக்கும் என கூறப்படுகிறது.

(8 / 11)

வியாழக்கிழமை விளக்கேற்றினால் குழந்தைகளால் ஏற்படக்கூடிய சிக்கல்கள், உத்திர தோஷம், குடும்ப சிக்கல்கள், ஆண்களுக்கு திருமண தடை உள்ளிட்டவை விளக்கும் என கூறப்படுகிறது.(Pixabay)

வெள்ளிக்கிழமை விளக்கேற்றினால் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை, கடன் சிக்கல், மனவேதனை உள்ளிட்டவை நீங்கும் என கூறப்படுகிறது.

(9 / 11)

வெள்ளிக்கிழமை விளக்கேற்றினால் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை, கடன் சிக்கல், மனவேதனை உள்ளிட்டவை நீங்கும் என கூறப்படுகிறது.(Pixabay)

சனிக்கிழமை விளக்கேற்றினால் வியாபார சிக்கல்கள், ஆரோக்கிய குறைபாடு, வேலையின்மை, ராகுவால் உண்டாக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் எனக் கூறப்படுகிறது.

(10 / 11)

சனிக்கிழமை விளக்கேற்றினால் வியாபார சிக்கல்கள், ஆரோக்கிய குறைபாடு, வேலையின்மை, ராகுவால் உண்டாக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் எனக் கூறப்படுகிறது.(Pixabay)

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.)

(11 / 11)

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.)(Pixabay)

மற்ற கேலரிக்கள்