Cyclone Fengal: ‘வருது வருது.. விலகு விலகு.. 12 மணி நேரத்தில் புயலாக மாறும் ஃபெங்கல்’ வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
- ஃபெங்கல் புயல், அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உருவாகியிருக்கும் அந்த காற்றுழுத்த தாழ்வு நிலையின் அப்டேட் என்ன என்பது குறித்து இங்கே காணலாம்.
- ஃபெங்கல் புயல், அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உருவாகியிருக்கும் அந்த காற்றுழுத்த தாழ்வு நிலையின் அப்டேட் என்ன என்பது குறித்து இங்கே காணலாம்.
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
(1 / 6)
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. (HT_PRINT)
(2 / 6)
நாகப்பட்டினத்திற்கு 400 கி.மீ., தென் கிழக்கிலும், சென்னைக்கு 590 கி.மீ., தெற்கு-தென்கிழக்கு இடையே அந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது மையம் கொண்டுள்ளது. (PTI)
(3 / 6)
தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட ஓரிரு இடங்களில் மட்டுமே அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல். இன்று அதிகபட்சமாக 21 செ.மீ., மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. (Lakshmi)
(4 / 6)
கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது 650 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில், 2198 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.(AFP)
(5 / 6)
தற்போது உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றழுத்து தாழ்வு நிலை, அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.(PTI)
மற்ற கேலரிக்கள்