தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Paranjith: மாட்டுக்கறி டயலாக்;குப்பை படம் எடுத்து..போஸ்டர் காசு கூட; அப்படியே ஓடிரு சொன்னாங்க’ - பா. ரஞ்சித் உருவான கதை!

PaRanjith: மாட்டுக்கறி டயலாக்;குப்பை படம் எடுத்து..போஸ்டர் காசு கூட; அப்படியே ஓடிரு சொன்னாங்க’ - பா. ரஞ்சித் உருவான கதை!

Jul 08, 2024 10:11 PM IST Kalyani Pandiyan S
Jul 08, 2024 10:11 PM , IST

PaRanjith: படத்தை பார்த்தவர்கள் படத்தை, இது ஒரு குப்பை படம். இதை தயவு செய்து ரிலீஸ் செய்யாதீர்கள். அப்படியே ஓடி விடுங்கள்.ரிலீஸ் செய்தால், போஸ்டர் ஒட்டின காசு கூட, உங்கள் கைக்கு வராது என்று பயமுறுத்தி விட்டார்கள். - பா. ரஞ்சித் உருவான கதை!

PaRanjith: மாட்டுக்கறி டயலாக்;குப்பை படம் எடுத்து..போஸ்டர் காசு கூட; அப்படியே ஓடிரு சொன்னாங்க’ - பா. ரஞ்சித் உருவான கதை!

(1 / 7)

PaRanjith:  பிரபல தயாரிப்பாளரான சிவி குமார் தான் முதன்முறையாக தயாரித்த அட்டக்கத்தி திரைப்படம் குறித்தும், அதன் இயக்குநர் பா. ரஞ்சித்தும் குறித்தும், டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!இது குறித்து அவர் பேசும் போது, "ரஞ்சித் உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர். இன்று வரை அவர் என்னிடம் அதே எளிமையோடு பழகிக் கொண்டிருக்கிறார். அட்டக்கத்தி திரைப்படம் எடுக்கும் போது, நான் ஒரு புது தயாரிப்பாளர் என்பதால், என்னை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக,  ரஞ்சித் பார்த்து பார்த்து கவனமுடன் வேலை செய்தார். 

(2 / 7)

காலை 7 மணிக்கு ஷாட்ஷூட்டிங் செய்த எல்லா நாட்களுமே காலை 7 மணிக்கு ஷாட் வைத்து விடுவார். அந்த படத்தில் தான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அறிமுகமானார். முதலில் சந்தோஷ் நாராயணனுக்கும், ரஞ்சித்திற்கும் பழக்கமே கிடையாது. நான்தான் சந்தோஷை ரஞ்சித்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தேன்.  ரஞ்சித் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்ததால், அவருக்கும் யுவன் சங்கர் ராஜாவிற்கும் பழக்கம் இருந்தது. இதனால், தன்னுடைய படத்திற்கு யுவன்சங்கர்ராஜா தான் இசையமைக்க வேண்டும் என்று பிடிவாதமாக நின்றார். ஆனால் எனக்கு சந்தோஷின் இசை மீது நாட்டம் இருந்தது. இதனையடுத்து ரஞ்சித்திடம், நான் சந்தோஷின் மெட்டுகளை பார்க்குமாறு அனுப்பி வைத்தேன்.   

(3 / 7)

இதையடுத்து இருவரும் சந்தித்து பேச ஒரு கட்டத்தில், ரஞ்சித் சந்தோஷ் எனக்கு ஓகே என்று சொல்லிவிட்டார். அப்படித்தான் சந்தோஷ நாராயணன் அந்த படத்திற்குள் வந்தார். படத்தை ஒரு வழியாக எடுத்து முடித்து விட்டோம். ஆனால் அந்தப் படத்தை எங்களால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. காரணம், யாருமே படத்தை வாங்க முன்வரவில்லை.குப்பை படம்படத்தை பார்த்தவர்கள் படத்தை, இது ஒரு குப்பை படம். இதை தயவு செய்து ரிலீஸ் செய்யாதீர்கள். அப்படியே ஓடி விடுங்கள்.ரிலீஸ் செய்தால், போஸ்டர் ஒட்டின காசு கூட, உங்கள் கைக்கு வராது என்று பயமுறுத்தி விட்டார்கள். இதனால், அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக் கொண்டே சென்றது. இந்த நிலையில்தான் இயக்குநர் ரஞ்சித், வெங்கட் பிரபுவிடம் விஷயத்தை கொண்டு சென்றார்.  

(4 / 7)

வெங்கட் பிரபு அப்பொழுது கார்த்திக்கை வைத்து பிரியாணி படத்தை எடுப்பதற்கான வேலைகளில் இருந்தார். அந்த படத்தின் தயாரிப்பாளர் தான் ஞானவேல் ராஜா. அவருக்கு இந்த செய்தி சென்ற நிலையில், அவர் மற்றும் வெங்கட் பிரபு சார்ந்த குழுவினர், படத்தை பார்த்தார்கள். இதையடுத்து ஞானவேல் ராஜா என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னார். நான் அவரை பார்க்கச் சென்றேன். 

(5 / 7)

படத்திற்கு செலவான மொத்த ரூபாயை கேட்டார். நான் படத்திற்கு மொத்தமாக 2 1/4 கோடி  செலவானதாக சொன்னேன். ஆனால், அவர் எனக்கு ஒரு பெரிய டீலை கொடுத்து அந்த படத்தை வாங்கிய அவர், கிட்டத்தட்ட அட்டக்கத்தி படத்திற்காக 3 கோடிக்கு ரூபாய்க்கு மேலே பப்ளிசிட்டி செய்தார். அதை பார்த்த எனக்கு கை காலெல்லாம் நடுங்கி விட்டது. அதற்கான காரணத்தை நான் கேட்ட பொழுது, அவரது நிறுவனம் முதன்முறையாக ஒரு படத்தை விநியோகம் செய்வதால், அவ்வாறு செய்ததாக கூறினார்கள். 

(6 / 7)

இன்னொரு  இவ்வகையான பப்ளிசிட்டி மூலம், அவர்கள் படத்தின் முதல் காட்சியிலேயே 1 1/2 கோடி அளவுக்கு வசூல் செய்ய வேண்டும் என்பதை டார்கெட்டாக வைத்திருந்தார்கள். முன்னதாக, அந்த படத்தை சில சேனல்களுக்கு கொண்டு சென்று 35 லட்சம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டேன். அந்த பணத்தை வைத்து படத்திற்கு மேலும் பப்ளிசிட்டி செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் அதைக் கூட வாங்குவதற்கு தயாராக இல்லை ஆனால், பின்னாளில் அந்த படத்தை அவர்கள் 3. 30 கோடி ரூபாய்க்கு வாங்கினார்கள். அந்த படத்தின் வெற்றி அதை சாத்தியப்படுத்தியது." என்று பேசினார்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்