ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஆட்ட நாயகன் விருது.. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தனித்துவ சாதனை புரிந்த தோனி! என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஆட்ட நாயகன் விருது.. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தனித்துவ சாதனை புரிந்த தோனி! என்ன தெரியுமா?

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஆட்ட நாயகன் விருது.. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தனித்துவ சாதனை புரிந்த தோனி! என்ன தெரியுமா?

Published Apr 15, 2025 10:36 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Apr 15, 2025 10:36 PM IST

  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்திய தோனி, ஐபிஎல் 2025 தொடரில் சிஎஸ்கே அணி இரண்டாது வெற்றஇ பெற முக்கிய காரணமாக அமைந்தார். பழைய பாணி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஃபினிஷ் செய்த தோனி 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டநாயகன் விருதையும் வென்றார்

ஐபிஎல் 2025 தொடரின் 30வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஐந்த தொடர் தோல்விகளுக்கு பிறகு லக்னோவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை பெற்றது. சிஎஸ்கேவின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணாக நெருக்கடியான நேரத்தில் களமிறங்கி தனது வழக்கமான பாணியில் அதிரிடியை வெளிப்படுத்தி ஆட்டத்தை பினிஷ் செய்த எம்.எஸ். தோனி உள்ளார். சிஎஸ்கே அணி, தனது பேட்டிங் மீதான விமர்சனத்துக்கு பேட் மூலம் பதில் அளித்துள்ளார்

(1 / 6)

சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக ஐபிஎல் 2025இல் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து 43 வயதாகு தோனி அணியின் கேப்டனாக தற்போது செயல்பட்டு வருகிறார். லக்னோவுக்கு எதிராக 7வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய தோனி 11 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 26 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். தோனி களமிறங்கியபோது 30 பந்துகளில் 58 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிறப்பாக பேட் செய்து 3 பந்துகள் எஞ்சியிருக்க அணி வெற்றியை பெற முக்கிய காரணமாக அமைந்தார்

(2 / 6)

இந்த போட்டியில் பேட்டிங்கில் 26 ரன்கள் அடித்ததுடன், முதல் இன்னிங்ஸில் ஒரு ஸ்டம்பிங், ஒரு கேட்ச் மற்றும் ஒரு ரன்அவுட் என மூன்று விக்கெட்டுகள் வீழ்வற்கும் காரணமாக இருந்துள்ளார். இதனால் தோனிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற மிக வயதான வீரர் என்ற பெருமையை பெற்றார் தோனி. 43 வயது 280 நாட்களில், இந்த விருதைப் பெற்ற அவர், 11 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சாதனையை முறியடித்தார். முன்னதாக, 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பிரவீன் தாம்பே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது  ​​அவருக்கு 42 வயது 208 நாட்கள். அந்த சாதனையை தோனி முறியடித்தார்

(3 / 6)

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனி 16வது முறை ஆட்ட நாயகன் விருதைப் வென்றார். 2019க்கு பிறகு ஆறு ஆண்டுகள், அதாவது 2175 நாட்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த விருதைப் பெற்றார். கேப்டனாக மொத்தம் 17 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார் தோனி. ஐபிஎல் வரலாற்றில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்ற சாதனையையும் தோனி வைத்திருக்கிறார்

(4 / 6)

ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை ஆட்டமிழக்கச் செய்த முதல் வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றார். இந்தப் பட்டியலில் தோனிக்குப் பிறகு, தினேஷ் கார்த்திக் அடுத்த இடத்தில் உள்ளார். அவர் 182 விக்கெட்டுகளை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். மூன்றாவது இடத்தில் உள்ள ஏபி டிவில்லியர்ஸ் 126, நான்காவது இடத்தில் ராபின் உத்தப்பா 124, ஐந்தாவது இடத்தில் விருத்திமான் சஹா 118 ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளார்கள்

(5 / 6)

சிறந்த பினிஷராக இருந்து வரும் எம்எஸ் தோனி டி20 கிரிக்கெட்டில் ஆட்டத்தின் கடைசி கட்ட ஓவர்களில் இதுவரை 4005 ரன்கள் அடித்துள்ளார். இதில் 305 பவுண்டரிகளும், 236 சிக்ஸர்களும் அடங்கும்

(6 / 6)

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், இளங்கலை காட்சிவழி தொடர்பியல், முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்றவர். 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் என 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவத்துடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் அனைத்து பிரிவுகளிலும் கட்டுரை எழுதுபவர். விளையாட்டு, கிரிக்கெட், சினிமா, லைப்ஸ்டைல் பிரிவுகளில் தனித்துவமான பங்களிப்பை அளித்து வருகிறார். விளையாட்டு, சினிமா, பயணம், சமைத்தல் பிடித்தமான பொழுபோக்கு

மற்ற கேலரிக்கள்