தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Cristiano Ronaldo Turns 39 On February 5, 2024

HBD Cristiano Ronaldo: தோட்டக்காரரின் மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தின் ஹீரோவான கதை!

Feb 05, 2024 07:25 AM IST Karthikeyan S
Feb 05, 2024 07:25 AM , IST

  • கால்பந்து உலகின் ஜாம்பவனாக திகழும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று (பிப்.05) தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ரொனால்டோவுக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறிவரும் நிலையில், இந்த சிறப்பு நாளில் அவரை பற்றி விளக்குகிறது இந்த சிறிய புகைப்படத் தொகுப்பு.

(1 / 7)

ரொனால்டோவுக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறிவரும் நிலையில், இந்த சிறப்பு நாளில் அவரை பற்றி விளக்குகிறது இந்த சிறிய புகைப்படத் தொகுப்பு.(AFP)

போர்ச்சுகல் நாட்டின் பஞ்சால் மாகாணத்தில், மதீரா தீவில் 1985ஆம் ஆண்டு, பிப்ரவரி 5ஆம் தேதி பிறந்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரது பெற்றோர் நின்னிஸ் - மதிரா. ரொனால்டோ பிறந்த போது அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ரொனால்ட் ரீகன். 

(2 / 7)

போர்ச்சுகல் நாட்டின் பஞ்சால் மாகாணத்தில், மதீரா தீவில் 1985ஆம் ஆண்டு, பிப்ரவரி 5ஆம் தேதி பிறந்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரது பெற்றோர் நின்னிஸ் - மதிரா. ரொனால்டோ பிறந்த போது அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ரொனால்ட் ரீகன். (REUTERS)

முதலில் தோட்ட வேலை பார்த்து வந்த ரொனால்டோவின் தந்தை பின்னர் கால்பந்து கிளப் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது தந்தையுடன் கிளப்புக்கு வேடிக்கை பார்க்க சென்றார் ரொனால்டோ. மைதானத்தில் விளையாடிய வீரர்களை பார்த்து ரொனால்டோவுக்கு கால்பந்து மீது ஆர்வம் ஏற்பட்டது.

(3 / 7)

முதலில் தோட்ட வேலை பார்த்து வந்த ரொனால்டோவின் தந்தை பின்னர் கால்பந்து கிளப் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது தந்தையுடன் கிளப்புக்கு வேடிக்கை பார்க்க சென்றார் ரொனால்டோ. மைதானத்தில் விளையாடிய வீரர்களை பார்த்து ரொனால்டோவுக்கு கால்பந்து மீது ஆர்வம் ஏற்பட்டது.(AFP)

தனது 7வது வயதில் தந்தை பணியாற்றிய உள்ளூர் கிளப் அணியில் சிறுவர்களுக்கான அணியில் ரொனால்டோவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த ரொனால்டோ, அன்று தொடங்கிய பயணம் கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக இன்றும் தொடர்கிறார் ரொனால்டோ.

(4 / 7)

தனது 7வது வயதில் தந்தை பணியாற்றிய உள்ளூர் கிளப் அணியில் சிறுவர்களுக்கான அணியில் ரொனால்டோவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த ரொனால்டோ, அன்று தொடங்கிய பயணம் கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக இன்றும் தொடர்கிறார் ரொனால்டோ.(AP)

கடந்த 2003 முதல் அவர் சர்வதேச போட்டிகளில் போர்ச்சுகல் அணிக்காக விளையாடி வருகிறார். கிளப், சர்வதேச போட்டி என அனைத்து போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 850-க்கும் மேற்பட்ட கோல்களை பதிவு செய்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அண்மையில் படைத்துள்ளார்.

(5 / 7)

கடந்த 2003 முதல் அவர் சர்வதேச போட்டிகளில் போர்ச்சுகல் அணிக்காக விளையாடி வருகிறார். கிளப், சர்வதேச போட்டி என அனைத்து போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 850-க்கும் மேற்பட்ட கோல்களை பதிவு செய்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அண்மையில் படைத்துள்ளார்.(REUTERS)

2003 முதல் 2022ஆம் ஆண்டு வரை உலகின் தலைச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார் ரொனால்டோ.

(6 / 7)

2003 முதல் 2022ஆம் ஆண்டு வரை உலகின் தலைச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார் ரொனால்டோ.(AFP)

39 வயதை எட்டியுள்ள அவர் போர்ச்சுகல் மற்றும் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார். கால்பந்து விளையாட்டு வீரர்களில் உலகிலேயே முதன்முறையாக அதிகபட்ச ஊதியமாக ஒரு பில்லியன் டாலர் வாங்கியவர் என்ற பெருமையை பெற்றவர்.

(7 / 7)

39 வயதை எட்டியுள்ள அவர் போர்ச்சுகல் மற்றும் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார். கால்பந்து விளையாட்டு வீரர்களில் உலகிலேயே முதன்முறையாக அதிகபட்ச ஊதியமாக ஒரு பில்லியன் டாலர் வாங்கியவர் என்ற பெருமையை பெற்றவர்.(AFP)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்