Cristiano Ronaldo Birthday: 7 வயதில் ஆரம்பித்த கனவு.. 923 கோல்கள்.. கால்பந்தாட்டத்தின் நாயகன் ரொனால்டோ பிறந்தநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cristiano Ronaldo Birthday: 7 வயதில் ஆரம்பித்த கனவு.. 923 கோல்கள்.. கால்பந்தாட்டத்தின் நாயகன் ரொனால்டோ பிறந்தநாள் இன்று!

Cristiano Ronaldo Birthday: 7 வயதில் ஆரம்பித்த கனவு.. 923 கோல்கள்.. கால்பந்தாட்டத்தின் நாயகன் ரொனால்டோ பிறந்தநாள் இன்று!

Feb 05, 2025 07:37 AM IST Karthikeyan S
Feb 05, 2025 07:37 AM , IST

  • HBD Cristiano Ronaldo: கால்பந்து விளையாட்டின் ஹீரோவாக திகழ்ந்து வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று (பிப்ரவரி 5) தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இந்த சிறப்பு நாளில் அவரை பற்றி விளக்குகிறது இந்த சிறிய புகைப்படத் தொகுப்பு.

போர்ச்சுகல் நாட்டின் பஞ்சால் மாகாணத்தில் மதீரா தீவில் 1985ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி பிறந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரது பெற்றோர் நின்னிஸ் - மதிரா. ரொனால்டோ பிறந்த போது அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ரொனால்ட் ரீகன். 

(1 / 7)

(Image: Reuters)

முதலில் தோட்ட வேலை பார்த்து வந்த ரொனால்டோவின் தந்தை பின்னர் கால்பந்து கிளப் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது தந்தையுடன் கிளப்புக்கு வேடிக்கை பார்க்க சென்றார் ரொனால்டோ. மைதானத்தில் விளையாடிய வீரர்களை பார்த்து ரொனால்டோவுக்கு கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

(2 / 7)

தனது 7வது வயதில் தந்தை பணியாற்றிய உள்ளூர் கிளப் அணியில் சிறுவர்களுக்கான அணியில் ரொனால்டோவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த ரொனால்டோ, அன்று தொடங்கிய பயணம் கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக இன்றும் தொடர்கிறார்.

(3 / 7)

40ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் ரொனால்டோ 923 கோல்கள் அடித்துள்ளார். கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவராக அறியப்படுகிறார். மேலும் தனது 30 வயது வரை 463 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ 30 வயதுக்கு பிறகு 460 கோல்களை அடித்துள்ளார்.

(4 / 7)

யுனைடெட் அணிக்காக 346 போட்டிகளில் விளையாடிய ரொனால்டோ 145 கோல்களை அடித்துள்ளார். இவற்றில் ரியல் மாட்ரிட்டில் தான் ரொனால்டோ தனது பெரும்பாலான வெற்றிகளை பெற்றார். அவர் லாஸ் பிளாங்கோஸ் அணிக்காக 315 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில் 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் உட்பட 15 பட்டங்களை வென்றுள்ளார்.

(5 / 7)

(Image:Reuters)

உலகளவில் அதிக சர்வதேச கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 135 கோல்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.

(6 / 7)

(REUTERS)

கால்பந்து விளையாட்டு வீரர்களில் உலகிலேயே முதன்முறையாக அதிகபட்ச ஊதியமாக ஒரு பில்லியன் டாலர் வாங்கியவர் என்ற பெருமையையும் பெற்றவர் ரொனால்டோ.

(7 / 7)

(Image: AP )

மற்ற கேலரிக்கள்