Sajeevan Sajana: WPL முதல் பந்தில் சிக்ஸருடன் பினிஷ்! ஓவர் நைட்டில் ஹீரோயின் ஆன வீராங்கனை - யார் இந்த சஞ்சீவன் சஜ்னா?
- Sajeevan Sajana: மகளிர் ப்ரீமியர் லீக் முதல் போட்டியே த்ரில் ஆட்டமாக அமைந்தது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தியது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றிக்கு காரணமாக இருந்தவர் அறிமுக மகளிர் ப்ரீமியர் லீக் போட்டியில் விளையாடிய சஞ்சீவன் சஞ்சனா

(1 / 7)
மகளிர் ப்ரீமியர் லீக் இரண்டாவது சீசன் கோலாகல நிகழ்ச்சிகளுடன் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கியது. நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் மகளிர் - டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்டபோது சிக்ஸரை பறக்கவிட்டு ஓவர் நைட்டில் ஹீரோயின் ஆனார் அறிமுக மகளிர் ப்ரீமியர் லீக் போட்டியில் மும்பை அணிக்காக களமிறங்கிய சஞ்சீவன் சஜ்னா
(PTI)(2 / 7)
மகளிர் ப்ரீமியர் லீக்கில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர், அதுவும் அணியின் வெற்றிக்காக அமைந்தது சஜ்னாவை திரும்பி பார்க்க வைக்கும் விதமாக அமைந்தது. ஸ்பின்னர் ஆலிஸ் காப்சே பந்தில் கிரீஸை விட்டு இறங்கி வந்த லாங் ஆன் திசையில் பந்தை பறக்கவிட்டார் சஜ்னா
(PTI)(3 / 7)
சஞ்சீவன் சஜ்னா ஒரு ஆல்ரவுண்டராக உள்ளார். வலது கை பேட்டராகவும், வலது கை ஆஃப் ப்ரேக் ஸ்பின் பவுலராகவும் இருந்து வருகிறார்
(PTI)(4 / 7)
கேரளா, தென் மண்டலம், இந்தியா ஏ அணிகளுக்காக விளையாடியிருக்கும் சஜ்னா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கி மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் அறிமுகமாகியுள்ளார்.
(AFP)(5 / 7)
டெல்லி கேபிடல்ஸ வீராங்கனை மின்னு மணிக்கு அடுத்தபடியாக, மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடும் குரிச்சியா பழங்குடியின வீராங்கனையாக உள்ளார் சஜ்னா. அடிப்படை விலையான ரூ. 10 லட்சத்தில் ஏலம் எடுக்கப்பட்டார் சஜ்னா
(PTI)மற்ற கேலரிக்கள்