Virat Kohli Record: மைல்கல் சாதனையை புரிந்த விராட் கோலி! ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது வீரராக கலக்கல்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Virat Kohli Record: மைல்கல் சாதனையை புரிந்த விராட் கோலி! ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது வீரராக கலக்கல்

Virat Kohli Record: மைல்கல் சாதனையை புரிந்த விராட் கோலி! ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது வீரராக கலக்கல்

May 20, 2024 07:25 AM IST Muthu Vinayagam Kosalairaman
May 20, 2024 07:25 AM , IST

  • Virat Kohli Record: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் 2வது ஓவரில் ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலி பவுண்டரிகள் மூலம் புதியதொரு சாதனை படைத்தார்.

மே 18ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி தனிப்பட்ட மைல்கல் சாதனையை எட்டினார். இந்த சாதனையை எட்டிய இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்று கோலி பெருமை பெற்றார். ஐபிஎல் வரலாற்றின் 17 பதிப்புகளில் இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே இந்த அரிய சாதனையை படைத்துள்ளனர்

(1 / 6)

ஐபிஎல் வரலாற்றில் 700 பவுண்டரிகள் என்ற மைல்கல்லை கோலி எட்டினார். இதன் மூலம் ஐபிஎல்லில் 700 பவுண்டரிகள் அடித்த இரண்டாவது வீரராக மாறியுள்ளார்.  ஆட்டத்தின் 2வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் 2வது பந்தில் பவுண்டரி அடித்தபோது இந்த சாதனையை நிகழ்த்தினார்

(2 / 6)

விராட் கோலி இதுவரை விளையாடியிருக்கும் 251 போட்டியில், 243 இன்னிங்ஸ்களில் 700 பவுண்டரிகளை அடித்துள்ளார். கோலிக்கு முன், ஐபிஎல்லில் 700 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார். அவர் 222 ஐபிஎல் போட்டிகளில் 221 இன்னிங்ஸ்களில் 768 பவுண்டரிகளை அடித்துள்ளார்

(3 / 6)

இந்தப் போட்டியில், கோலி 29 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்தார். ஐபிஎல்லில் விராட் கோலி அடித்த பவுண்டரிகளின் எண்ணிக்கை 702 ஆக உள்ளது

(4 / 6)

விராட் கோலி இதுவரை ஐபிஎல்லில் 38.88 சராசரியில் 7971 ரன்களை குவித்துள்ளார் மற்றும் 271 சிக்சர்களை அடித்துள்ளார். 8 சதங்கள் மற்றும் 55 அரைசதங்கள் அடித்துள்ளார். ஐபிஎல்லில் மொத்தம் 10 முறை டக் அவுட் ஆகியுள்ளார்

(5 / 6)

அரை சதம் அடிக்கத் தவறிய போதிலும், கோலி தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் 47 ரன்களுடன் 700 ரன்களைக் கடந்துள்ளார். ஐபிஎல் 2024ல் 14 போட்டிகளில் 64.36 என்ற சராசரியில் 708 ரன்கள் எடுத்துள்ளார் கோஹ்லி. இந்த ஐபிஎல்லில் 1 சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடித்துள்ளார்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்