Brothers in India Cricket: அச்சு அசல் சாம்சன் போல் இருக்கும் அவர் தம்பி சாலி சாம்சன்! இந்திய கிரிக்கெட் உடன் பிறப்புகள்
- National Brother's Day 2024: மே 24ஆம் தேதியான இன்று தேசிய சகோதரர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் பிரபல அண்ணன் - தம்பி வீரர்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்
- National Brother's Day 2024: மே 24ஆம் தேதியான இன்று தேசிய சகோதரர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் பிரபல அண்ணன் - தம்பி வீரர்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்
(1 / 7)
ஆண்டுதோறும் தேசிய சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு சகோதரர்களுக்கும் இடையே உணர்ச்சி பூர்வமான பிணைப்பு இருந்து வருகிறது. வலியிலும், வேதனையிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வருபவர்கள் சகோதரர்கள் இருக்கிறார்கள். சிறப்பு மிக்க இந்த நாளில் இந்திய கிரிக்கெட்டில் இடம்பிடித்திருக்கும் உடன் பிறப்புகள் பற்றி பரார்க்கலாம்
(2 / 7)
ராகுல் சஹார் - தீபக் சஹார்: ராகுல் சஹார் மற்றும் தீபக் சஹார் ஆகிய இருவரும் பவுலர்களாக இருப்பதுடன், இந்திய அணிக்காக அவர்கள் விளையாடியுள்ளார்கள். தீபக் சஹார் சிஎஸ்கே அணிக்காகவும், ராகுல் சஹால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்கள்
(3 / 7)
சஞ்சு சாம்சன் - சாலி சாம்சன்: சஞ்சு சாம்சனின் சகோதரர் பெயர் சாலி சாம்சன். இவரை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. பார்ப்பதற்கு அச்சு அசலாக சஞ்சு சாம்சன் போன்றே இருக்கும் சாலி சாம்சன் இதுவரை இந்தியாவின் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். இவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
(4 / 7)
இர்பான் பதான் - யூசுப் பதான்: இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த சிறந்த ஆல்ரவுண்டர் சகோதரர்களாக இவர்கள் உள்ளார்கள். இந்தியாவுக்காக விளையாடிய இவர்கள் இருவரும் தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்கள். இந்திய அணி 2007இல் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இந்த சகோதரர்கள் இடம்பிடித்திருந்தார்கள். அதேபோல், 2011இல் இந்தியா இரண்டாவது உலகக் கோப்பை வென்ற அணியில் யுசுப் பதான் இடம்பிடித்திருந்தார்
(5 / 7)
ஹர்திக் பாண்ட்யா - க்ருணால் பாண்ட்யா: பாண்ட்யா பிரதர்ஸ் என்ற அழைக்கப்படும் இவர்கள் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார்கள். எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ளார். ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா மும்பை அணி கேப்டனாகவும், க்ருணால் பாண்ட்யா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஆல்ரவுண்டராகவும் உள்ளார். இருவரும் பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடிய ஆல்ரவுண்டர்களாக உள்ளார்கள்
(6 / 7)
சர்ப்ரஸ் கான் - முஷிர் கான்: சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான சர்ப்ரஸ் கான், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தார். இவரது தம்பியான முஷிர் கான் யு19 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். இவர்கள் இருவருக்கும் கிரிக்கெட் குருவாக இவர்களின் தந்தை நவ்ஷத் கான் இருந்து வருகிறார்
மற்ற கேலரிக்கள்