உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகளை சாப்பிட சரியான நேரம் எது? இதோ சில உதவிக் குறிப்புகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகளை சாப்பிட சரியான நேரம் எது? இதோ சில உதவிக் குறிப்புகள்!

உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகளை சாப்பிட சரியான நேரம் எது? இதோ சில உதவிக் குறிப்புகள்!

Published Apr 15, 2025 03:26 PM IST Suguna Devi P
Published Apr 15, 2025 03:26 PM IST

  • சமீப காலமாக தினம் தோறும் உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது எனக் கூறப்படுகிறது. ஆனால் இவற்றை சாப்பிடுவதற்கு என குறிப்பிட்ட காலம் இருக்கிறது. அப்போது தான் இதன் நன்மை முழுமையாக நமது உடலுக்கு கிடைக்கும.

கொட்டைகள் மற்றும் உலர்ந்த பழங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை திடீரென சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்காது. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை விட எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். உடலுக்கு சிறந்த பலன்களைப் பெற, கொட்டைகள் மற்றும் உலர் பழங்களைச் சாப்பிடும்போது ஒரு குறிப்பிட்ட அட்டவணையைப் பின்பற்ற வேண்டும்.

(1 / 7)

உலர்ந்த பழங்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. எனவே, காலையிலோ அல்லது உடற்பயிற்சிக்கு முன்போ மிதமாக சாப்பிடுவது நல்லது. ஆனால் கொட்டைகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்தவும், ஆபத்தை குறைக்கவும் கொட்டைகளை எந்த நேரத்திலும் சாப்பிடலாம்.

(2 / 7)

(Pexels)

அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு இருப்பவர்கள் காலையில் ஊறவைத்த திராட்சையை சாப்பிடுவது நல்லது. இதில் இரும்புச்சத்து உள்ளது. PMS உள்ளவர்கள் இரவு உணவின் போது தங்கள் சூப்களில் மெக்னீசியம் நிறைந்த பூசணி விதைகள், பாதாம் அல்லது வால்நட்ஸைச் சேர்த்து சாப்பிடலாம்.

(3 / 7)

அதிக கார்போஹைட்ரேட் உணவுக்கு முன் கொட்டைகள் சாப்பிடுவது, குறிப்பாக நீரிழிவு நோய் அல்லது PCOS உள்ளவர்களுக்கு, உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். கொட்டைகளில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதம் உள்ளன, அவை கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை தாமதப்படுத்துகின்றன.

(4 / 7)

பாதாம் மற்றும் வால்நட்ஸ் ஆற்றல் அளவை மேம்படுத்த உதவும். காலையில் இதை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. உடற்பயிற்சி செய்வதற்கு முன் பேரிச்சம்பழம் மற்றும் பிஸ்தா பருப்புகள் உடலுக்கு ஆற்றலை வழங்க உதவும்.

(5 / 7)

காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த பாதாம், திராட்சை, வால்நட்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இது உடல் எடையை சீராக்க உதவும். இருப்பினும், சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால், கொட்டைகளை காலையிலோ அல்லது மதியம் சாப்பிடலாம். ஆனால் இரவில் தாமதமாக உலர் பழங்களைத் தவிர்க்கவும்.

(6 / 7)

காலையில் நார்ச்சத்து நிறைந்த கொடிமுந்திரி, அத்திப்பழம், திராட்சை, பாதாம் போன்ற உணவுகளை சாப்பிடுவது நல்லது, இது சரியான செரிமானம் மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. மாலையில் வயிற்று உப்புசத்தைத் தடுக்க, ஊறவைத்த அத்திப்பழம் மற்றும் வால்நட்ஸ் போன்ற குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.

(7 / 7)

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, 2019 ஆம் ஆண்டு முதல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் ஆங்கில இலக்கியத் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேல் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஆகும். இவர் கடந்த 2024 செப்டம்பர் மாதம் முதல் தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் தேசம், லைப்ஸ்டைல், சினிமா மற்றும் உலகம் தொடர்பான செய்திகளில் தனது பங்களிப்பை அளித்து வருக்கிறார்.

மற்ற கேலரிக்கள்