Savukku Shankar: சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்..எந்த வழக்கு தெரியுமா?
- யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அவதூறாக பேட்டியளித்தாக புகார் எழுந்தது.
- யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அவதூறாக பேட்டியளித்தாக புகார் எழுந்தது.
(1 / 5)
இது தொடர்பாக கோயம்புத்தூர் மாநகர சைபர் க்ரைம் போலீஸார் யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் அந்த பேட்டியை வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோரை கடந்த மே மாதம் 14 ஆம் தேதி கைது செய்தனர்.
(2 / 5)
கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர்.
(3 / 5)
இந்த வழக்கு விசாரணை கோவை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் நடைபெற்று வந்த நிலையில், சவுக்கு சங்கர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீது இன்று (ஜூலை 26) விசாரணை நடைபெற்றது.
(4 / 5)
மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு, தினமும் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மற்ற கேலரிக்கள்