கோடையில் உடலை குளிர்ச்சியாக வைக்கும் பானங்கள்.. இளநீர் vs கரும்பு சாறு.. எது நல்லது, ஆரோக்கிய நன்மைகள் என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கோடையில் உடலை குளிர்ச்சியாக வைக்கும் பானங்கள்.. இளநீர் Vs கரும்பு சாறு.. எது நல்லது, ஆரோக்கிய நன்மைகள் என்ன?

கோடையில் உடலை குளிர்ச்சியாக வைக்கும் பானங்கள்.. இளநீர் vs கரும்பு சாறு.. எது நல்லது, ஆரோக்கிய நன்மைகள் என்ன?

Published May 06, 2025 11:16 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published May 06, 2025 11:16 PM IST

  • கோடை காலத்தில் அதிகம் பேர் பருக கூடிய பானங்களாக இளநீர், கரும்பு சாறு ஆகியவை உள்ளன. இவற்றில் எது ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை தருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கோடையில், வெயில் மற்றும் வெப்ப தாக்கம் காரணமாக அதிகமாக வியர்வை வெளியேறுகிறது. இது உடலில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் அத்தியாவசிய கூறுகளின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். இதைத் தவிர்க்க, நீரேற்றமாக இருப்பது முக்கியம். இதற்காக, கரும்பு சாறு, இளநீர் போன்ற பானங்களை குடிக்கிறோம். இந்த இரண்டு பானங்களின் சுவை  வெவ்வேறு மட்டுமல்லாமல், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பும் வேறுபட்டது

(1 / 6)

கரும்பு சாறு இயற்கையாகவே இனிப்பானது மட்டுமல்லாமல் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. கோடையில் கரும்பு சாறு குடிப்பதால் உடலுக்கு எவ்வித தீங்கும் கிடையாது. அதை தயாரிக்கும் போது சிலர் சர்க்கரையை பயன்படுத்துகிறார்கள். அதிகப்படியான சர்க்கரையைப் பயன்பாடு இயற்கைக்கு மாறானவை. இது கரும்பு சாற்றின் தூய்மையை குறைக்கும் மற்றும் உங்கள் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்

(2 / 6)

இளநீர் கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும் இயற்கை பானம். இது பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும். இது உடலில் உள்ள அத்தியாவசிய கூறுகளின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக, இதில் கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி, ஃபோலேட், பொட்டாசியம், துத்தநாகம், புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. கரும்பு சாறு போல் இளநீரிலும் இயற்கையான இனிப்புச் சுவை உள்ளது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்

(3 / 6)

அதிகமாக கரும்புச் சாறு பருகுவது வாயு பிரச்னை, வயிற்று வலி மற்றும் வீக்கம் போன்ற உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். இது இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கும்.

(4 / 6)

இளநீர் அதிகமாக பருகுவது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும். மேலும், அதன் அதிக பொட்டாசியம் உள்ளடக்கம் காரணமாக, சிறுநீரகங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது அவற்றின் செயல்பாட்டைப் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்

(5 / 6)

கோடை காலத்தில், கரும்புச் சாறு மற்றும் இளநீர் ஆகிய இரண்டும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும், ஆனால் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் ஆரோக்கியத்தை மனதில் வைத்து கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் இளநீரை தேர்வு செய்யலாம். அதேபோல் கலோரிகள் குறைவு என்பதால் எடை இழக்க விரும்புவோருக்கும் சிறந்த தேர்வாகும்

(6 / 6)

கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்