பெரும் சோகம்.. திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து.. 7 பேர் பலி.. நிதியுதவி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பெரும் சோகம்.. திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து.. 7 பேர் பலி.. நிதியுதவி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பெரும் சோகம்.. திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து.. 7 பேர் பலி.. நிதியுதவி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Dec 13, 2024 11:22 AM IST Divya Sekar
Dec 13, 2024 11:22 AM , IST

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் எலும்பியல் மருத்துவமனையில் நள்ளிரவில் நடந்த தீ விபத்தில் குழந்தை மற்றும் மகளிர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(1 / 6)

(2 / 6)

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று (12-12-2024) இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த திரு.மணிமுருகன் (வயது 30) த/பெ.ஜெகநாதன், திருமதி. மாரியம்மாள் (வயது 50) க/பெ.ஜெகநாதன், தேனி மாவட்டம் சீலம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த திரு. சுருளி (வயது 50) த/பெ. கந்தசாமி, திருமதி.சுப்புலட்சுமி (வயது 45) க/பெ.சுருளி, திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த திரு.ராஜசேகர் (வயது 36) த/பெ.ராஜேந்திரன், செல்வி.கோபிகா (வயது 6) த/பெ. ராஜசேகர் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

(3 / 6)

மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

(4 / 6)

இந்த தீ விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். 

(5 / 6)

தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக  மருத்துவமனையில் தடயவியல் நிபுணர்கள், தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்