தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Clay Pot Water Benefits: இயற்கை குளிரூட்டி! மண்பானை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Clay Pot Water Benefits: இயற்கை குளிரூட்டி! மண்பானை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Apr 06, 2024 08:27 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 06, 2024 08:27 PM , IST

  • கோடை காலத்தில் நிலவும் சூடான வெப்பநிலையில் இருந்து விடுபடும் பொருட்டு மண்பானையில் தண்ணீர் பருகுவது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு நன்மைகளை தரும். மண்பானை தண்ணீர் தொண்டையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமின்றி, பல நன்மைகளையும் தருகிறது.

கோடை காலத்தில் வெப்பநிலையானது 40 டிகிரி வரை அதிகரிக்கும். சுட்டெரிக்கும் ​​​வெயிலில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் குளிர்சாதன பெட்டியில் உள்ள தண்ணீரை தேடி பருகினால் இதமான உணர்வு ஏற்படும். ஆனால் அதன் பின்னர் தொண்டை வலி, சளி போன்ற உடல் உபாதைகளால் சிக்கி கொள்ளலாம். உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள மண் குடத்தின் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

(1 / 7)

கோடை காலத்தில் வெப்பநிலையானது 40 டிகிரி வரை அதிகரிக்கும். சுட்டெரிக்கும் ​​​வெயிலில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் குளிர்சாதன பெட்டியில் உள்ள தண்ணீரை தேடி பருகினால் இதமான உணர்வு ஏற்படும். ஆனால் அதன் பின்னர் தொண்டை வலி, சளி போன்ற உடல் உபாதைகளால் சிக்கி கொள்ளலாம். உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள மண் குடத்தின் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது.(PTI)

ஆயுர்வேதத்தின் படி, மண் குடத்தில் இருந்து தண்ணீர் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். மண் குடத்தை உலர்த்தும்போது, ​​அதில் சிறு துளைகள் இருக்கும். மண் குவிமாடத்துக்குள் வைக்கப்படும் நீர் அறிவியல் மாற்றங்களால் இயற்கையான முறையில் ஆவியாகி குளிர்விக்கப்படுகிறது

(2 / 7)

ஆயுர்வேதத்தின் படி, மண் குடத்தில் இருந்து தண்ணீர் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். மண் குடத்தை உலர்த்தும்போது, ​​அதில் சிறு துளைகள் இருக்கும். மண் குவிமாடத்துக்குள் வைக்கப்படும் நீர் அறிவியல் மாற்றங்களால் இயற்கையான முறையில் ஆவியாகி குளிர்விக்கப்படுகிறது(AFP)

செரிமானம் மற்றும் மலச்சிக்கல் - மண் குடத்தின் தண்ணீரில் பல்வேறு தாதுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மண் பானையில் உள்ள பண்புகள் தண்ணீரில் பரவுவதால் பல்வேறு பலன்கள் கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள பல்வேறு மாசுக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது. மண் பானை நீர் இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் சமநிலைப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது. இது உடலில் செரிமானத்தை சீராக வைக்க உதவுகிறது

(3 / 7)

செரிமானம் மற்றும் மலச்சிக்கல் - மண் குடத்தின் தண்ணீரில் பல்வேறு தாதுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மண் பானையில் உள்ள பண்புகள் தண்ணீரில் பரவுவதால் பல்வேறு பலன்கள் கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள பல்வேறு மாசுக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது. மண் பானை நீர் இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் சமநிலைப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது. இது உடலில் செரிமானத்தை சீராக வைக்க உதவுகிறது(PTI)

மண் பானை நீரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலை வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாக்கின்றன, சூரிய ஒளியின் வெப்ப தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைக்கின்றன. இந்த பானையின் ஊட்டச்சத்து உடலுக்கு செல்வதன் மூலம் கோடை நாள்களில் உடல் ஃபிட்டாக வைக்க உதவுகிறது

(4 / 7)

மண் பானை நீரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலை வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாக்கின்றன, சூரிய ஒளியின் வெப்ப தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைக்கின்றன. இந்த பானையின் ஊட்டச்சத்து உடலுக்கு செல்வதன் மூலம் கோடை நாள்களில் உடல் ஃபிட்டாக வைக்க உதவுகிறது

வெயிலில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் ஃப்ரிட்ஜில் இருக்கும் தண்ணீரை குடித்தால் இதமாக உணர்ந்தாலும், பின்னர் சில மணி நேரங்களில் வலி போன்ற பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். குளிர்சாதனப் பெட்டியின் உள்ள நீரை பருகுவதற்கு பதில், மண்பானை தண்ணீரால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது

(5 / 7)

வெயிலில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் ஃப்ரிட்ஜில் இருக்கும் தண்ணீரை குடித்தால் இதமாக உணர்ந்தாலும், பின்னர் சில மணி நேரங்களில் வலி போன்ற பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். குளிர்சாதனப் பெட்டியின் உள்ள நீரை பருகுவதற்கு பதில், மண்பானை தண்ணீரால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது(PTI)

மண்ணில் உள்ள கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை தண்ணீரை அதிக சத்துக்களுடன் செழுமைப்படுத்துகிறது. மண்பானையில் உள்ள தண்ணீரை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க, அதில் ஈரமான துணியை போர்த்தி வைக்கவும். சிறிது நேரம் கழித்து குடத்தில் குளிர்ந்த நீர் கிடைக்கும்

(6 / 7)

மண்ணில் உள்ள கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை தண்ணீரை அதிக சத்துக்களுடன் செழுமைப்படுத்துகிறது. மண்பானையில் உள்ள தண்ணீரை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க, அதில் ஈரமான துணியை போர்த்தி வைக்கவும். சிறிது நேரம் கழித்து குடத்தில் குளிர்ந்த நீர் கிடைக்கும்(AFP)

மண் இயற்கையில் காரத்தன்மை கொண்டதாக இருப்பதால், உடல் நீரில் pH அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனால், அசிடிட்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது

(7 / 7)

மண் இயற்கையில் காரத்தன்மை கொண்டதாக இருப்பதால், உடல் நீரில் pH அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனால், அசிடிட்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது(Dinesh Gupta)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்