கலை இயக்குனரைத் தொடர்ந்து மரணித்த எடிட்டர்.. யார் இந்த நிஷாத் யூசூஃப்? கங்குவா அணியின் அடுத்தடுத்த இழப்பு!
- RIP Nishad Yusuf : பிரபல படத்தொகுப்பாளர் நிஷாத் யூசூஃப் இன்று காலை அவர் தங்கியிருந்த வீட்டில் இறந்தநிலையில் கண்டறியப்பட்டார். மரணத்திற்கான காரணம் தெரியாத நிலையில், கேரளா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கங்குவா படத்தின் கலை இயக்குனர் காலமான நிலையில், தற்போது படத்தின் எடிட்டரான நிஷாத் யூசூஃப்!

(1 / 6)
கேரளாவை சேர்ந்த படத்தொகுப்பாளரான 43 வயதாகும் நிஷாந்த் யூசுஃப் கொச்சியிலுள்ள பனம்பிள்ளி நகரில் உள்ள தனது பிளாட்டில் அதிகாலை 2 மணிக்கு இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்து நிஷாத் யூசூஃப் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக எர்ணாக்குளம் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
(2 / 6)
நிஷாத், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பிளாட்டில் வசித்து வந்துள்ளார். நிஷாத் இறப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(3 / 6)
மலையாள சினிமாவின் படத்தொகுப்பாளரான நிஷாத், பல்வேறு சூப்பர் ஹிட் மலையாள படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 2022இல் வெளியான தள்ளுமல்லா என்ற படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளர், கேரளா அரசு விருதை வென்றார்.
(4 / 6)
உண்டா, ஒன், சவுதி வெல்லக்கா, சாவர், அடியோஸ் அமிகோ போன்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு இவர்தான் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.
(5 / 6)
இதைத்தொடர்ந்து பிரமாண்டமாக உருவாகியிருக்கும் கங்குவா படத்துக்கு இவர்தான் எடிட்டராக பணிபுரிந்திருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மரணம் அடைந்துள்ளார்.
(6 / 6)
ஏற்கனவே கங்குவா படத்தில் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்த நிலையில், தற்போது எடிட்டரும் இறந்திருப்பது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மற்ற கேலரிக்கள்