Cine Special: ரஜினிகாந்த், கமல்ஹாசனின் கல்ட் கிளாசிக் படங்கள்.. ஜனவரி 26இல் வெளியான சூப்பர் ஹிட் தமிழ் படங்கள் லிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cine Special: ரஜினிகாந்த், கமல்ஹாசனின் கல்ட் கிளாசிக் படங்கள்.. ஜனவரி 26இல் வெளியான சூப்பர் ஹிட் தமிழ் படங்கள் லிஸ்ட்

Cine Special: ரஜினிகாந்த், கமல்ஹாசனின் கல்ட் கிளாசிக் படங்கள்.. ஜனவரி 26இல் வெளியான சூப்பர் ஹிட் தமிழ் படங்கள் லிஸ்ட்

Jan 26, 2025 07:30 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 26, 2025 07:30 AM , IST

  • Tamil Movie Released on This Day: நாட்டின் குடியரசு தினமான இன்று (ஜனவரி 26) தமிழில் மறக்க முடியாத படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் இந்த நாளில் பார்த்து ரசிக்ககூடிய சில த்ரோ பேக் படங்களை பார்க்கலாம்

ஜனவரி 26ஆம் தேதி எம்ஜிஆர், சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு சூப்பர் ஹிட்டான கல்ட் கிளாசிக் படங்கள் வெளியாகியுள்ளன

(1 / 7)

நெஞ்சில் ஓர் ஆலயம்: சி.வி. ஸ்ரீதர் இயக்கத்தில் கல்யாண் குமார், முத்துாமன், தேவிகா நடிப்பில் 1962இல் வெளியான படம் நெஞ்சில் ஓர் ஆலயம். தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத முக்கோண காதல் கதையான இந்த படம் ஒரே செட்டில் படமாக்கப்பட்டது

(2 / 7)

மோட்டர் சுந்தரம் பிள்ளை: 1966இல் எஸ்.எஸ். பாலன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த படமாக இது அமைந்துள்ளது. அமெரிக்க படமான தி ரிமார்க்கபிள் மிஸ்டர். பென்னிபேக்கர் என்ற படத்தை தழுவி இந்தியில் சூப்பர் ஹிட்டான கிரகஸ்தி படத்தின் ரீமேக்காக உருவானது. 100 நாள்களுக்கு மேல் சிவாஜி கணேசனுக்கு சூப்பர் ஹிட்டான இந்த படம் அவரது சிறப்பான பெர்பார்மென்ஸுக்கான சான்றாக இருந்து வருகிறது

(3 / 7)

குமரி கோட்டம்: பி. நீலகண்டன் இயக்கத்தில் எம்ஜிஆர் - ஜெயலலிதா நடித்து கமர்ஷியல் ஹிட்டான படமான இது 1971இல் வெளியானது. எம்ஜிஆர் ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்ட படமாக இது உள்ளது

(4 / 7)

பில்லா: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கல்ட் கிளாசிக் படம் பில்லா 1980இல் இதே நாளில் தான் வெளியானது. ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இந்த படம் இந்தியில் சூப்பர் ஹிட்டான டான் படத்தின் ரீமேக் என்றாலும் தமிழில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாக உள்ளது

(5 / 7)

தீ: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மற்றொரு ஹிட் படம் தான் தீ. பில்லா வெற்றியை தொடர்ந்து ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரஜினி நடித்த இந்த படம் 1981இல் வெளியானது. இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த சூப்பர் ஹிட் படமான தீவார் ரீமேக்காக இது உருவானது

(6 / 7)

வாழ்வே மாயம்: ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கித்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா   நடிப்பில் 1982இல் வெளியான இந்த படம் 200 நாள்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வெற்றி பெற்றது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பிரேமாபிஷேகம் படத்தின் ரீமேக்காக இது உருவானது 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்