Cine Special: பார்த்திபன் இரவின் நிழல் மட்டுமல்ல.. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்திய படங்கள்
- சினிமாக்கள் மேக்கிங்கில் வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாக இருப்பது ஒரே ஷாட்டில் படம் முழுவதையும் உருவாக்குவது. அந்த வகையில் தமிழிலும் ஒரே ஷாட்டில் உருவான படங்களும் இருக்கின்றன
- சினிமாக்கள் மேக்கிங்கில் வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாக இருப்பது ஒரே ஷாட்டில் படம் முழுவதையும் உருவாக்குவது. அந்த வகையில் தமிழிலும் ஒரே ஷாட்டில் உருவான படங்களும் இருக்கின்றன
(1 / 7)
சிங்கிள் ஷாட்டில் உருவாகி ரசிகர்களை கவர்ந்த உலக சினிமாக்கள் ஏராளம் இருக்கின்றன. அந்த வகையில் கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்ககூடாத ஒன்-ஷாட் அல்லது சிங்கிள் ஷாட் படங்கள் எவை என்பதை பார்க்கலாம்
(4 / 7)
தமிழில் மற்றொரு ஒன்-ஷாட் படமாக 2022இல் வெளியான யுத்த காண்டம் என்ற த்ரில்லர் படம் உள்ளது. அனந்தராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், யோகி ஜேபி, போஸ் வெங்கட், சுரேஷ் வெங்கட் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். முற்றிலும் புதிய குழுவினரால் 50க்கும் மேற்பட்ட ஒத்திகை மேற்கொள்ளப்பட்ட இந்த படம் உருவானது
(5 / 7)
ஒரே டேக்கில் உருவான படங்களில் மிஸ் செய்யாமல் பார்க்ககூடிய படமாக அமெரிக்க டார்க் காமெடி பம் பேர்ட்மேன் உள்ளது. அலெஜான்ட்ரோ ஜி. இனாரிட்டு இயக்கியிருக்கும் இந்த படம் 87வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் விருது வென்றது. மொத்தம் 9 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டது
(6 / 7)
2000ஆவது ஆண்டில் வெளியான டைம்கோடு என்ற அமெரிக்க படம் முழுவதுமாக பரிசோதனை முயற்சியில் எடுக்கப்பட்ட ஒரே-ஷாட் படமாக இருந்தது. அதிலும் இந்த படத்தில் பிரேம் நான்காக பிரிக்கப்பட்டு வெவ்வேறு கதைகளுடன் கொண்டிருப்பதாக அமைந்திருக்கும். பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் விதமாக இந்த படம் இருக்கும்
(7 / 7)
த்ரில்லர் மன்னன் ஹிட்ஹாக் இயக்கத்தில் சைக்கலாஜிக்க் க்ரைம் த்ரில்லர் படமாக 1948இல் வெளியான படம் ரோப். ஹிட்ஹாக்கின் டெக்னிகலர் படமாக இருந்து வரும் ரோப் நிகழ்நேரத்தில் எடுக்கப்பட்ட படமாகவும் நீண்ட ஷாட்களை தொகுத்து நான்கு ஷாட்களாக காட்டியிருப்பார்கள். சீட் எட்ஜ் த்ரில்லர் படங்களில் ஒன்றாக ரோப் படம் இருந்து வருகிறது
மற்ற கேலரிக்கள்