Christmas 2022: இந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட சிறந்த இடங்கள்
- பிரார்த்தனை, விருந்து, பார்ட்டி என அனைத்தும் நிறைந்த கொண்டாட்டமாக கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளது. இந்தியாவில் ஒரு சில இடங்களில் மிகவும் கோலாகலமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில் தவறாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கண்டுகளிக்க வேண்டிய சில இடங்களை பார்க்கலாம்.
- பிரார்த்தனை, விருந்து, பார்ட்டி என அனைத்தும் நிறைந்த கொண்டாட்டமாக கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளது. இந்தியாவில் ஒரு சில இடங்களில் மிகவும் கோலாகலமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில் தவறாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கண்டுகளிக்க வேண்டிய சில இடங்களை பார்க்கலாம்.
(1 / 6)
கிறிஸ்துமஸ் என்பது மேற்கத்திய நாடுகளில் மட்டும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படும் திருவிழாவாக பலரும் நினைப்பதுண்டு. ஆனால் இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் திருவிழா ஒரு மிகப் பெரிய நிகழ்வாகவே கொண்டாடப்படுகிறது. சிறப்பான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை விரும்பவோர் தவறாமல் செல்ல வேண்டிய இடங்கள் சிலவற்றை காணலாம்(Representative Image (Unsplash))
(2 / 6)
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் என்ற இந்த நகரில் அதிக அளவிலான கிறிஸ்தவர்கள் உள்ளார்கள். இங்கு சென்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்பதென்பது புதுமையான அனுபவத்தை தரும். கிறிஸ்துமஸ் நாளில் நகர் முழுக்கவே விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வீதிகள் தோறும் குழந்தைகள் மென்மையான பாடல்களை கோரஸாக பாட கொண்டாட்டமயமாக இருக்கும்(Representative Image (Unsplash))
(3 / 6)
கோவா: ஆண்டின் 365 நாள்களில் கோவாவுக்கு எப்போது சென்றாலும் கொண்டாட்டம் தான். அதிலும் குறிப்பாக பார்டி நகரமான அங்கு டிசம்பர் மாதம் சென்றால் சொல்லவே தேவையில்லை. கொண்டாட்டத்தின் உச்சத்தை காணலாம். கடற்கரையோரம் இரவு பொழுதில் கிறிஸ்துமஸ், நியூ இயர் பார்ட்டிகள் புதுவித அனுபவத்தை தரும். சுற்றுலா பயணிகள் நாடு முழுவதிலும் இருந்து அதிகமானோர் கோவாவுக்கு வரும் மாதமாக டிசம்பர் அமைந்துள்ளது. அப்போது கோவாவின் ஒட்டுமொத்த அழகையும் கண்டு ரசிக்கலாம்(Representative Image (Unsplash))
(4 / 6)
கேரளா: கோவாவுக்கு அடுத்தபடியாக தென் இந்தியா பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பெரிய அளவில் இருக்கும் பகுதியாக கேரளா உள்ளது. இங்கு பார்டி கொண்டாடங்களை பெரிதாக இல்லாவிட்டாலும் இரவு நேர பிராத்தனை மிகப் பெரிய அளவில் இருப்பதோடு, ஆன்மிகத்தில் உங்களை இளைப்பார வைக்கும்(Representative Image (Unsplash))
(5 / 6)
புதுச்சேரி: இதை ஒரு மினி கோவா என்று அழைக்கும் விதமாக கடற்கரையோரம் விருந்து, பார்ட்டி கொண்டாட்டம் ஒரு பக்கம் என்றால், இங்கு அமைந்திருக்கும் எண்ணற்ற கோதிக் தேவாலயங்கள் மற்றும் கதீட்ரல்கள் சென்று பிரார்த்தனையும் மேற்கொள்ளலாம். இந்த நாளில் கொண்டாட்டத்துக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன(Representative Image (Unsplash))
மற்ற கேலரிக்கள்