Chiyaan vikram: எனக்கு ரசிகர்கள் இல்லையா..? கடுப்பேற்றிய ரிப்போர்ட்டர்...சிவந்து போன விக்ரம்!-chiyaan vikram latest response to the topic of whether he has as many fans as suriya ajith kumar - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Chiyaan Vikram: எனக்கு ரசிகர்கள் இல்லையா..? கடுப்பேற்றிய ரிப்போர்ட்டர்...சிவந்து போன விக்ரம்!

Chiyaan vikram: எனக்கு ரசிகர்கள் இல்லையா..? கடுப்பேற்றிய ரிப்போர்ட்டர்...சிவந்து போன விக்ரம்!

Aug 12, 2024 10:05 PM IST Kalyani Pandiyan S
Aug 12, 2024 10:05 PM , IST

Chiyaan vikram:கோலிவுட்டின் முதல் மூன்று முன்னணி ஹீரோக்களில் நீங்கள் இல்லையே என்று அந்த நிருபர் கேட்டதால் விவாதம் தொடர்ந்தது. -  கடுப்பான விக்ரம்   

Chiyaan vikram: எனக்கு ரசிகர்கள் இல்லையா..? கடுப்பேற்றிய ரிப்போர்ட்டர்...சிவந்து போன விக்ரம்! விக்ரம் தங்கலான் படத்தை விளம்பரப்படுத்தும் போது, அவரிடம் திரைத்துறையில் அவரின் சமகால போட்டியாளர்களான அஜித்குமார், சூர்யா அளவுக்கு நீங்கள் பிரபலமாக இல்லையே என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இங்கே!    

(1 / 5)

மதுரையில் நடந்த சந்திப்பு! மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் நிருபர் ஒருவர் விக்ரமிடம், "உங்களுக்கு அஜித், சூர்யா அளவுக்கு ரசிகர்கள் இல்லையே" என்று கேட்டார். அதற்கு பதற்றம் இல்லாமல் பதிலளித்த விக்ரம் "என் ரசிகர்களைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது.    

(2 / 5)

அப்படி தெரிய வேண்டுமென்றால்  நீங்கள் தியேட்டருக்கு வந்து பாருங்கள்" என்று கூறி அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தார்.இருப்பினும், கோலிவுட்டின் முதல் மூன்று முன்னணி ஹீரோக்களில் நீங்கள் இல்லையே என்று அந்த நிருபர் கேட்டதால் விவாதம் தொடர்ந்தது.    

(3 / 5)

அதற்கு பதில் அளித்த விக்ரம், "டாப் ஹீரோ லிஸ்டில் இருப்பதுமுக்கியமல்ல. பார்வையாளர்கள்தான் முக்கியம். தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்நானும் தூள், சாமி போன்ற  கமர்சியல் படங்களில் நடித்தவன்தான். அதனால் மற்ற ஹீரோக்கள் போலவும் எனக்கும் படம் நடிக்கத் தெரியும். ஆனால் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல வேண்டும். அந்த வகையில் தங்கலானுக்கு என்னால் முடிந்ததைக் கொடுத்துள்ளேன்.    

(4 / 5)

என்னைப் பொறுத்தவரை எல்லோருமே ஏதோ ஒரு வகையில் என் ரசிகர்கள்தான்" என்றார். இதற்கிடையே குறுக்கிட்ட தொகுப்பாளர் உணர்ச்சிவசப்பட்டு நீங்கள் குறிப்பிடப்பட்ட மற்ற ஹீரோக்களுக்கு 'ஹேட்டர்கள்' இருப்பதாகவும், விக்ரமுக்கு அப்படி  யாரும் இல்லை என்றும் கூறினார்.      

(5 / 5)

மற்ற கேலரிக்கள்