Ajithkumar: நடுரோட்டில் பிஞ்ச செருப்போடு நின்ற எஸ்.ஜே.சூர்யா.. காரில் ஏற்றி வாழ்க்கை கொடுத்த அஜித்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ajithkumar: நடுரோட்டில் பிஞ்ச செருப்போடு நின்ற எஸ்.ஜே.சூர்யா.. காரில் ஏற்றி வாழ்க்கை கொடுத்த அஜித்!

Ajithkumar: நடுரோட்டில் பிஞ்ச செருப்போடு நின்ற எஸ்.ஜே.சூர்யா.. காரில் ஏற்றி வாழ்க்கை கொடுத்த அஜித்!

Updated Mar 07, 2024 07:18 PM IST Kalyani Pandiyan S
Updated Mar 07, 2024 07:18 PM IST

படத்தின் ஒன் லைனை அஜித் கேட்க,எஸ் ஜே சூர்யா படத்தின் கதையை மிக விரிவாக சொல்லி இருக்கிறார். இதை கேட்ட அஜித்குமாருக்கு கதை பிடித்து விட, அவரோ தன்னுடைய நண்பரான தயாரிப்பாளர் சக்கரவர்த்தியிடம் எஸ் ஜே சூர்யாவை பரிந்துரை செய்கிறார். 

எஸ்.ஜே.சூர்யாவை அஜித் கண்டுபிடித்த கதையை பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு ஆகாயம் தமிழ் சேனலுக்கு கடந்த ஆண்டு பகிர்ந்தார். அந்த பேட்டி இங்கே!இது குறித்து அவர் பேசும் போது, “அப்போது அஜித் ஒரு நடிகராக வளர்ந்து வந்து கொண்டிருந்த சமயம். சூர்யா இயக்குநர் வசந்த் இயக்கத்தில் உருவான ஆசை திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.   

(1 / 6)

எஸ்.ஜே.சூர்யாவை அஜித் கண்டுபிடித்த கதையை பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு ஆகாயம் தமிழ் சேனலுக்கு கடந்த ஆண்டு பகிர்ந்தார். அந்த பேட்டி இங்கே!

இது குறித்து அவர் பேசும் போது, “அப்போது அஜித் ஒரு நடிகராக வளர்ந்து வந்து கொண்டிருந்த சமயம். சூர்யா இயக்குநர் வசந்த் இயக்கத்தில் உருவான ஆசை திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 

அப்போது அவரது வேலையை கவனித்த நடிகர் அஜித், அவரிடம் எதிர்காலத்தில் நாம் இணைந்து ஒரு படம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். அந்தப் படத்திற்குப் பின்னர் தனியாக படம் இயக்கலாம் என்று முடிவெடுத்த எஸ் ஜே சூர்யா, பல தயாரிப்பாளர்களிடம் சென்று வாலி திரைப்படத்தின் கதையை சொல்கிறார்.     

(2 / 6)

ஆனால் எங்கேயும் அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் ஒரு நாள் மதியம் பாண்டி பஜாரில்  பேருந்திற்காக  சூர்யா காத்துக் கொண்டிருந்தார். அப்போது சிவப்பு கலர் மாருதி ஒன்று அந்த சாலையை கடக்கிறது.    

(3 / 6)

அதற்குள் இருந்த ஒருவர் எஸ் ஜே சூர்யாவை பார்த்து விட, அந்த கார் பின்னோக்கி வந்தது. கண்ணாடியை இறக்கினால் அதற்குள் இருந்தது நடிகர் அஜித்குமார். கண்கள் இரண்டும் மிகவும் சோகமயமாக, செருப்பில் ஊக்கு மாட்டிக்கொண்டு நின்ற எஸ் ஜே சூர்யாவை வண்டியில் ஏறுங்கள் என்று அஜித்குமார் சொல்ல, அவரோ இல்லை இல்லை சார் நானே சென்று விடுகிறேன் என்று சமாளித்தார்.   

(4 / 6)

ஆனாலும் அஜித் விடுவதாக இல்லை. நான் வடபழனி தான் செல்கிறேன். வண்டியில் ஏறுங்கள் என்று வற்புறுத்தி அவரை காருக்குள் ஏற்றினார். காரினுள் ஏறியவுடன் எஸ் ஜே சூர்யா அஜித்திடம்… சார் அன்று நாம் இணைந்து படம் செய்யலாம் என்று சொன்னீர்களே என்று கேட்டபோது, கண்டிப்பாக செய்யலாம் என்ற அஜித், முதலில்  நீங்கள் சாப்பிட்டீர்களா என்று கேட்டு இருக்கிறார்.    

(5 / 6)

அதற்கு எஸ்.ஜே.சூர்யா ஏதோ சொல்லி சமாளிக்க, எஸ் ஜே சூர்யாவை அருகிலுள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இருவரும் உணவு அருந்தி இருக்கின்றனர். இதனையடுத்து படத்தின் ஒன் லைனை அஜீத் கேட்க,எஸ் ஜே சூர்யா படத்தின் கதையை மிக விரிவாக சொல்லி இருக்கிறார். இதை கேட்ட அஜித்குமாருக்கு கதை பிடித்து விட, அவரோ தன்னுடைய நண்பரான தயாரிப்பாளர் சக்கரவர்த்தியிடம் எஸ் ஜே சூர்யாவை பரிந்துரை செய்கிறார். அங்கு சென்று எஸ் ஜே சூர்யா கதைசொல்ல சக்கரவர்த்திக்கு கதை பிடித்து விட்டது. வாலி படம் தொடர்ந்தது” என்று பேசினார்.  

(6 / 6)

அதற்கு எஸ்.ஜே.சூர்யா ஏதோ சொல்லி சமாளிக்க, எஸ் ஜே சூர்யாவை அருகிலுள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இருவரும் உணவு அருந்தி இருக்கின்றனர். 

இதனையடுத்து படத்தின் ஒன் லைனை அஜீத் கேட்க,எஸ் ஜே சூர்யா படத்தின் கதையை மிக விரிவாக சொல்லி இருக்கிறார். இதை கேட்ட அஜித்குமாருக்கு கதை பிடித்து விட, அவரோ தன்னுடைய நண்பரான தயாரிப்பாளர் சக்கரவர்த்தியிடம் எஸ் ஜே சூர்யாவை பரிந்துரை செய்கிறார். அங்கு சென்று எஸ் ஜே சூர்யா கதைசொல்ல சக்கரவர்த்திக்கு கதை பிடித்து விட்டது. வாலி படம் தொடர்ந்தது” என்று பேசினார்.

மற்ற கேலரிக்கள்