Director Shankar: பாலியல் வழக்கில் மணமகன்..மகள் பட்ட 6 மாத ரண வேதனை.. நொந்து போன ஷங்கர்!
இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவிற்கும், கிரிக்கெட் வீரர் ரோஹித்திற்கும் திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே விவாகரத்து ஆனது. இந்த நிலையில் தன்னுடைய உதவி இயக்குநராக இருந்த தருண் கோபிக்கு ஐஸ்வர்யாவை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தார் ஷங்கர்.
(2 / 6)
இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவிற்கும், கிரிக்கெட் வீரர் ரோஹித்திற்கும் திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே விவாகரத்து ஆனது. இந்த நிலையில் தன்னுடைய உதவி இயக்குநராக இருந்த தருண் கோபிக்கு ஐஸ்வர்யாவை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தார் ஷங்கர். இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதை செய்யாறு பாலு ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசினார்.
(3 / 6)
அவர் பேசும் போது, “ ரோஹித் தரப்பு பெரிய கோஸ்வர குடும்பம். அதனை நம்பிதான் ஷங்கர் தரப்பு பெண்ணை கொடுத்து இருக்கிறது. அவர்களுக்கு புதுச்சேரியில் ஒரு கிரிக்கெட் அகாடமி, மதுரையில் ஒரு கிரிக்கெட் அகாடமி இருக்கிறது. அந்த அகாடமியில் சிறுமி ஒருவர் பயிற்சி எடுப்பதற்காக வந்திருக்கிறார்.
(4 / 6)
அங்கு அவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடந்திருக்கிறது. இதனையடுத்து அந்த பெண், அந்த அகாடமியை சேர்ந்த சிலர் தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்தார்கள் என்ற புகாரை, அங்குள்ள ஒரு பெரிய மனிதரிடம் சொல்லுகிறார்.
.
(5 / 6)
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த பெரிய மனிதர் மாணவியின் பெற்றோரை அழைத்து சமரசம் பேச முயற்சி செய்கிறார். அப்போது உங்கள் மகள் ரஞ்சி டிராஃபி, ஐபிஎல், இந்திய அணி ஆகியவற்றில் நிச்சயம் விளையாடுவாள்அதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம் என்று உறுதி கொடுக்கிறார்.
ஆனால் பெண்ணினுடைய பெற்றோரால் தனது குழந்தைக்கு நேர்ந்த அந்த பாலியல் ரீதியான துன்புறுத்தலை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
(6 / 6)
அப்போதுதான் ஷங்கர் உடைய முன்னாள் மாப்பிள்ளை ரோஹித்தும் சிக்குகிறார். போக்சோ சட்டம் உள்ளே இறங்குகிறது. அதன் பின்னர் தான் தெரிகிறது அந்த ரோஹித் என்பவர் மிக மிக மோசமானவர் என்று... ஆறு மாதங்களாக ஷங்கர் மகள் ரோஹித் உடன் எப்படி குடும்பம் நடத்தினார் என்று தெரியவில்லை.
இந்த சம்பவத்தால் மனம் நொந்து போனார் ஷங்கர். இருந்தாலும் பெண்ணை கொடுத்து விட்டோமே என்ற காரணத்திற்காக, அவரை காப்பாற்றும் முயற்சியில் கூட ஷங்கர் இறங்கினார். ஆனால் ஷங்கரின் மகளோ அவரை திட்டி இனி அவருடன் நான் வாழ மாட்டேன் என்று உறுதியாக சொல்ல, அதன் பின்னர் அவருக்கு மறுமணம் நடந்திருக்கிறது” என்று பேசினார்
மற்ற கேலரிக்கள்