Tamil News  /  Photo Gallery  /  Check Out The Tips To Stop Negative Thoughts

Negative Thinking: மனதில் நெகட்டிவ் எண்ணங்களா தோன்றுகிறதா?..சரி செய்வதற்கான ஈஸி டிப்ஸ் இதோ!

Jan 18, 2024 05:00 AM IST Karthikeyan S
Jan 18, 2024 05:00 AM , IST

  • Negative Thoughts: நெகட்டிவ் எண்ணங்களில் இருந்து விடுபடுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

கோபம், பதட்டம், பயம், முடிவெடுப்பதில் தடுமாற்றம், தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தம் உள்ளிட்டவை நெகட்டிவ் எண்ணங்களுக்கான அறிகுறிகள் என்று சொல்லலாம்.

(1 / 9)

நெகட்டிவ் எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றினால் முதலில் என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் அல்லது மறக்க நினைக்கும் சம்பவங்கள் நமக்கு தோன்றுகிறதா என்பதை முதலில் கண்டறிந்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

(2 / 9)

நெகட்டிவ் எண்ணங்களில் இருந்து விடுபட உங்கள் வேலைகளில் முடிந்தவரை அக்கறை செலுத்துங்கள். அடுத்தடுத்த வேலைகளை தொடர்ந்து திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

(3 / 9)

நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்த, நேர்மறையாக சிந்திக்கும் நபருடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள். அவர்களிடம் மனம்விட்டு பேசி நேரத்தை செலவிட வேண்டும்.

(4 / 9)

மனதில் ஒரு விஷயத்தைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருப்பதால் தேவையற்ற எண்ணங்கள்தான் தோன்றும். இதனால் மனஅழுத்தம் அதிகமாகலாம். எனவே, உங்கள் மீது அன்பு செலுத்தும் நெருக்கமான நண்பர் ஒருவருடன் மனதில் இருப்பதை ஷேர் செய்யுங்கள். அவர்கள் மூலம் உங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கலாம்.

(5 / 9)

உங்கள் பிரச்னைகளுக்கு பயணங்கள் கூட ஒரு நல்ல தீர்வாக அமையலாம். எனவே உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு தனியாகவோ அல்லது உங்கள் மீது அக்கறை காட்டும் நபருடனோ செல்லலாம். 

(6 / 9)

உங்கள் மன அழுத்தத்திற்குக் காரணமான நபர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்ல மாற்றத்தை தரும். 

(7 / 9)

நேர்மறை எண்ணங்களை ஊக்கப்படுத்தும் புத்தகங்களை வாசிக்கலாம். தியானம், யோகா ஆகியவையும் உங்களுக்கு உதவும்.

(8 / 9)

உங்களுக்கென்று குறிக்கோளை ஏற்படுத்திக்கொண்டு அதை நோக்கி உங்களது பயணத்தை திட்டமிடுங்கள்.

(9 / 9)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்