குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு.. தடுப்பது எப்படி?.. மாரடைப்புக்கான அறிகுறிகள் என்னென்ன? - விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு.. தடுப்பது எப்படி?.. மாரடைப்புக்கான அறிகுறிகள் என்னென்ன? - விபரம் இதோ!

குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு.. தடுப்பது எப்படி?.. மாரடைப்புக்கான அறிகுறிகள் என்னென்ன? - விபரம் இதோ!

Dec 27, 2024 02:27 PM IST Karthikeyan S
Dec 27, 2024 02:27 PM , IST

  • குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன? எதனால் இந்த பிரச்னை உருவாகிறது? இதை எப்படி சரிசெய்வது என்பது பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று உடலால் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமை ஆகும். குளிர்காலத்தின் தாக்கம் அதிகம் நோய்த்தொற்றுகள் மற்றும் பருவ கால நோய்களுடன் இந்த காலகட்டத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.

(1 / 6)

குளிர்காலத்தில் உடலில் குளிர்ச்சித் தன்மை அதிகரிக்கும். குளிர்ந்த வானிலை உடலை பாதிக்கிறது. உடலுக்கு போதுமான ரத்த ஓட்டத்தை வழங்கவும், உடலை சூடாக வைத்திருக்கவும் இதயத்தின் வேலை அதிகரிக்கிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் இதயம் இரண்டு மடங்கு வேலை செய்ய தொடங்கும். எனவே உடலுக்கு ஆக்சிஜென் அளவு அதிகம் தேவைப்படும். சட்டென அதிக ஆக்சிஜென் தேவைப்படுவதால் எதிர்பாராத விதமாக மாரடைப்பு உண்டாகுகிறது.

(2 / 6)

குளிர்காலத்தில் உடல் சூடாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக கதகதப்பான ஆடைகளை அணிவது, வெப்பமூட்டும் சாதனங்கள் மூலம் உடல் சூட்டை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். இது உங்களின் தட்பவெப்ப நிலையை சீராக வைத்து மாரடைப்பு பாதிப்பை குறைக்கும்.

(3 / 6)

மேலும், மோசமான உணவு பழக்கமும் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே குளிர்காலத்தில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை கொண்ட உணவுகளை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 

(4 / 6)

மேலும், மோசமான உணவு பழக்கமும் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே குளிர்காலத்தில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை கொண்ட உணவுகளை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். (Unsplash)

குளிர்காலத்தில் மக்கள் அதிக உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பதும் மாரடைப்பு அதிகரிப்பதற்கு மற்றொரு காரணமாகும். முறையான உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயத்தை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

(5 / 6)

மேலும் உடலுக்கும் மனதுக்கும் அழுத்தத்தை தரக்கூடிய வேலைகளை செய்வதாலும் மாரடைப்பு ஏற்படுகிறது. அதேநேரத்தில் ஒரே இடத்தில் மணி கணக்கில் உட்காருவதை தவிருங்கள். எதாவது வேலைகளை செய்யுங்கள். தொடர்ந்து உடலுக்கு வேலை கொடுப்பதால் உங்களின் தட்பவெப்ப நிலை சீராக இருக்கும். முடிந்த அளவு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்து வந்தால் மாரடைப்பு பாதிப்புகள் குறைவு.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்