Vitamin B12: உடலில் வைட்டமின் பி12 அதிகரிப்பால் என்னென்ன நோய்கள் ஏற்படும் தெரியுமா?
- Excessive Vitamin B12: உடலில் வைட்டமின் பி12 அதிகரிப்பால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி பார்ப்போம்.
- Excessive Vitamin B12: உடலில் வைட்டமின் பி12 அதிகரிப்பால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி பார்ப்போம்.
(1 / 7)
நம்முடைய உடல் சீராக இயங்குவதற்கு வைட்டமின் பி12 மிகவும் அவசியம். அதோடு ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதில் வைட்டமின் பி12 குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளது.
(2 / 7)
உடலில் வைட்டமின் பி12 பற்றாக்குறையால் பசியின்மை, மலச்சிக்கல், திடீர் எடை குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பெரும்பாலான மருத்துவர்கள் பி12 நிறைந்த உணவுப்பொருள்களோடு மாத்திரையையும் பரிந்துரைகின்றனர்.
(3 / 7)
அதேசமயம் அதிகப்படியான பி12 எடுத்துக்கொள்வதினால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பக்கவிளைவுகள் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
(4 / 7)
பெரும்பாலான பெண்கள் உடல் வலி, கால் வலி, இடுப்பு வலிக்கும் பி12 ஊசியை மருத்துவர்களின் ஆலோசனையின்றி செலுத்துகின்றனர். இதனால் ஒருசிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(5 / 7)
உடலில் பி12 அதிகரிப்பால் லேசான வயிற்றுப்போக்கு, அரிப்பு, தோல் வெடிப்பு, தலைவலி, தலைசுற்றல், குமட்டல், வாந்தி, நுரையீரல் வீக்கம் மற்றும் இதய செயலிழப்பு, நரம்பு ரத்த உறைவு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
(6 / 7)
ஒரு சிலருக்கு பி12 ஊசி அல்லது மாத்திரை எடுத்துக்கொண்ட உடனே முகம், நாக்கு மற்றும் தொண்டை வீக்கம், விழுங்குவதில் சிரமம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அந்த நேரத்தில் உடனே மருத்துவரை அணுகினால் பெரிய பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
மற்ற கேலரிக்கள்