கார்த்திகை தீபம் ஏற்ற சரியான நேரம் எது?.. எத்தனை விளக்குகள் ஏற்றலாம்.. எந்த திசையில் தீபத்தை ஏற்றக் கூடாது - விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கார்த்திகை தீபம் ஏற்ற சரியான நேரம் எது?.. எத்தனை விளக்குகள் ஏற்றலாம்.. எந்த திசையில் தீபத்தை ஏற்றக் கூடாது - விபரம் இதோ!

கார்த்திகை தீபம் ஏற்ற சரியான நேரம் எது?.. எத்தனை விளக்குகள் ஏற்றலாம்.. எந்த திசையில் தீபத்தை ஏற்றக் கூடாது - விபரம் இதோ!

Dec 10, 2024 02:40 PM IST Karthikeyan S
Dec 10, 2024 02:40 PM , IST

  • 2024 ஆம் ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருநாள் (வெள்ளிக்கிழமை) டிசம்பர் 13 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் தீபம் ஏற்ற சரியான நேரம் எது என்றும், வீட்டில் செல்வம் பெருக எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும் என்பது பற்றியும் தெரிந்துகொள்வோம்.

தமிழ் மாதங்களில் ஒன்றான கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நன்னாள் கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை திருநாள் என்றதும் நம் நினைவிற்கு வருவது தீப விளக்குகளும், திருவண்ணாமலை தீபமும் தான். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருநாளன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அடிவாரத்தில் பரணி தீபமும், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் 'மகா தீபம்' ஏற்றப்படும்.

(1 / 6)

திருவண்ணாமலையில் மலை உச்சியில் மாலை 6:00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். அதன் பிறகு 6:05 மணிக்கு மேல் வீடுகளில் திருவிளக்குகளை ஏற்றி அலங்கரிக்கலாம். திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சி தந்த சிவ பெருமான், நம்முடைய வீடுகளிலும் எழுந்தருளி, நமக்கு அருள் புரிய வேண்டும் என்பதற்காக வீடுகளிலும் விளக்கேற்றும் வழக்கம் உள்ளது.

(2 / 6)

கார்த்திகை தீபத்திருநாளன்று அகல் விளக்குகளில் பஞ்சு திரியிட்டு நல்லெண்ணெய் அல்லது பஞ்சு கூட்டு எண்ணெய்களை ஊற்றி விளக்கேற்ற வேண்டும். குறைந்தபட்சம் ஒரேயொரு நெய் விளக்கேற்றுவது சிறப்பு வாய்ந்ததாகும். 

(3 / 6)

வீடுகளில் குறைந்தபட்சம் 27 அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அதிகபட்சமாக எத்தனை விளக்குகள் வேண்டுமானாலும் ஏற்றிக்கொள்ளலாம். வீட்டு வாசலில் கோலத்தின் மீது தாம்பூலம் அல்லது மனை பலகை வைத்து ஐந்து முக குத்துவிளக்கு ஏற்றி வழிபடுவது சிறந்தது. வாசலில் ஏற்றப்பட்ட தீபம் 30 நிமிடங்கள் எரிந்தால் கூட போதுமானது. பிறகு எடுத்து விடலாம்.

(4 / 6)

கார்த்திகை தீபத்திருநாளன்று அகல் விளக்குகளை சுவாமி அறையில் ஏற்றி, கற்பூரம் தீபாரதனை செய்து வழிபடலாம். வெறும் வாயினால் ஊதி விளக்குகளை அணைக்கக்கூடாது. பூ அல்லது நீர்த்துளி, பால் துளியைக் கொண்டு விளக்கினை அமர்த்த வேண்டும்.

(5 / 6)

தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுவது அறிவு வளர்ச்சியும், செல்வ வளர்ச்சியும் தரும். கிழக்கு திசையில் ஏற்றுவது துன்பங்களை நீக்கும் என்பது நம்பிக்கை. மேற்கு திசையில் ஏற்றுவது கடன் தொல்லைகளையும், தோஷங்களையும் போக்கும். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் தெற்கு திசையில் தீபங்களை ஏற்றக்கூடாது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்