IPL Unbreakable Records: ஐபிஎல் கிரிக்கெட்டில் தகர்க்க முடியாக மைல்கல் சாதனைகள் லிஸ்ட் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ipl Unbreakable Records: ஐபிஎல் கிரிக்கெட்டில் தகர்க்க முடியாக மைல்கல் சாதனைகள் லிஸ்ட் இதோ!

IPL Unbreakable Records: ஐபிஎல் கிரிக்கெட்டில் தகர்க்க முடியாக மைல்கல் சாதனைகள் லிஸ்ட் இதோ!

Mar 13, 2024 06:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 13, 2024 06:00 AM , IST

  • ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு போட்டிகளிலும் எதாவதொரு சாதனை நிகழ்த்தபடுவது இயல்புதான். அதேசமயம் ஐபிஎல் போட்டிகளில் அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாத மைல்கல் சாதனைகள் எவை என்பதை பார்க்கலாம்

ஒரே சீசனில் அதிக ரன்கள், அதிக தொடர் வெற்றிகள் என ஐபிஎல் போட்டிகளில் வீழ்த்துவதற்கு கடினமாக சில சாதனைகள் இருக்கின்றன

(1 / 6)

2016 சீசனில் பேட்டிங்கில் தாண்டவம் ஆடிய விராட் கோலி அந்த ஒரே சீசனில் மட்டும் 973 ரன்கள் அடித்தார். இதில் நான்கு சதங்கள் அடங்கும். இதுவொரு மைல்கல் சாதனையாகவே இருந்து வருகிறது

(2 / 6)

2014 சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர்ச்சியாக 9 வெற்றிகளை பெற்றது. அத்துடன் 2015 சீசன் முதல் போட்டியிலும் வென்று 10 தொடர் வெற்றிகளை பெற்றது. வேறு எந்த அணியும் செய்திடாத சாதனையாக இது உள்ளது 

(3 / 6)

2013 சீசனில் புனே வாரியர்ஸ் அணியை புரட்டி எடுத்த கிறிஸ் கெய்ல் 66 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தார்.ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை எடுத்தது மட்டுமில்லாமல் 17 சிக்ஸர்களை பறக்க விட்டு மற்றொரு சாதனையும் புரிந்துள்ளார். இதை வீழ்த்துவது மிகவும் அரிதான விஷயமே

(4 / 6)

மற்றொரு அரிதான சாதனையாக ஒரே ஓவரில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா 37 ரன்கள் அடித்தது. 2021 சீசனில் ஆர்சிபி பவுலர் ஹர்ஷல் பட்டேலுக்கு எதிராக இதை செய்தார். ஜடேஜாவுக்கு முன்னரே கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணியில் கிறிஸ் கெய்ல் ஒரே ஓவரில் 37 ரன்கள் அடித்துள்ளார்

(5 / 6)

முதல் ஐபிஎல் போட்டியில் வெறும் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார் மும்பை இந்தியன்ஸ் வீரர் அல்சாரி ஜோசப். 2019 சீசனில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக அவர் நிகழ்த்திய இந்த சாதனை ஐபிஎல் வரலாற்றிலேயே சிறந்த பவுலிங்காக உள்ளது

(6 / 6)

மற்ற கேலரிக்கள்